×

வலிமை அப்டேட் கொடுத்த போனி கபூர்... செம குஷியில் ரசிகர்கள்

வலிமை படம் குறித்து போனி கபூர் தட்டி இருக்கும் ஒற்றை ட்வீட் தான் தற்போதைய வைரலாக இருக்கிறது.
 

போனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கொரோனா அச்சத்தால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனால் வலிமை குறித்து அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

தொடர்ந்து, சமீபத்தில் ரசிகரை சந்தித்த அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாத இறுதியில் வெளியாகும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருந்தனர்.


இந்நிலையில், போனி கபூர் ட்வீட் செய்து இருக்கிறார். அதில், வணக்கம், எங்கள் “வலிமை” திரைப்படத்தின் மீதான உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறோம். ஃபர்ஸ்ட் லுக்கை விரைவில் வழங்க உழைத்து கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஒன்னுமே இல்லாததுக்கு இதுவாது போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் சென்று இதையே பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News