Categories: Cinema News latest news

கவர்ச்சி ஓகே.. அந்தமாதிரி நடித்தாலும் தப்பில்லை… ஓஹோ இதனால் தான் இவங்க குட்டி நயன்தராவா.!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமாகி அதன் பிறகு பெரிய திரைக்கு வந்து அங்கும் கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகை வாணி போஜன். இவர் சின்னத்திரையில் நடிக்கும் போதே இவரை சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு.

 

இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே எனும் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைபெற்றது. அதன் பிறகு ட்ரிபிள்ஸ் எனும் ஹாட்ஸ்டார் வெப் தொடரில் நடித்து இருந்தார். அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் தொடர் ரிலீஸ் ஆகி உள்ளது. அதிலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொள்கையில் கவர்ச்சி பற்றி கேட்கப்பட்டது.

இதையும் படியுங்களேன் – தமிழ் சினிமாவின் ‘கனவு’ நாயகன் சூர்யா தான்… லோகேஷ், வெற்றிமாறன் முதல் சிவா வரை… முழு விவரம் இதோ…

நீங்கள் படங்களில் கவர்ச்சியாக நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. சினிமாவில் கவர்ச்சி ஒன்றும் தப்பில்லை. நான் சேலை கட்டினால் கூட அது கவர்ச்சியாக தான் சிலர் குறிப்பிடுகின்றனர். கவர்ச்சி என்பது கதைக்கு தேவைப்பட்டு அதில் நடிப்பேன். என்றவாறு பதில் அளித்து உள்ளார்.

இதையும் படியுங்களேன் –  அப்பாடா அவங்களுக்கு கோப்ரா பிடிக்கலையாம்.. அப்போ விக்ரம் படம் பெரிய ஹிட்… இது சினிமா சீக்ரெட்..

இதனை பார்த்த நெட்டிசன்கள் சும்மாவாக சொன்னார்கள் உங்களை சின்னத்திரை நயன்தாரா என்று சிலாகித்து வருகின்றனர்.  நயன்தாராவும் ஆரம்ப காலகட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan