×

குவியும் பட வாய்ப்புகள்... வனிதா ஹேப்பி அண்ணாச்சி

பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். 
 
குவியும் பட வாய்ப்புகள்... வனிதா ஹேப்பி அண்ணாச்சி

விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை வனிதா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிக்பாஸ் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்த சூட்டோடு குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். 

கொரோனா காலத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பீட்டர் பாலைப் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். அதன்பிறகு டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக சில காலம் பணியாற்றினார். 

இந்தநிலையில், வனிதா சினிமாவில் தீவிர கவனம் செலுத்திவந்தார். அவருக்கு இப்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. லாக்டவுன் முடிந்து ஷூட்டிங் தொடங்கிய நிலையில், அனல் காற்று என்ற படத்தில் வனிதா நடித்து முடித்துவிட்டார். அந்தப் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், அடுத்ததாக 2 கே காதல் அழகானது பட வாய்ப்பு வனிதாவுக்குக் கிடைத்திருக்கிறது.

அத்தோடு பிரசாந்துடன் அந்தகன் படத்திலும், வசந்தபாலன் அடுத்ததாக இயக்கும் படத்திலும் வனிதா நடிக்கிறார். பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் பிக்பாஸ் வனிதா ஹேப்பியாக இருக்கிறார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News