Connect with us
jyovika

Bigg Boss

அம்மாவுக்கு சளைச்சது இல்ல பொண்ணு… அடேங்கப்பா…பிக்பாஸ் ஜோவிகா இவ்ளோ பண்ணியிருக்காங்களா!…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள்தான் வனிதா விஜய்குமார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா திரைப்படத்தில் நடித்துள்ளார், இப்படமே இவர் அறிமுகமான முதல் படமாகும்.

இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இவரது மகள் ஜோவிகா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். 20 வயதே ஆன ஜோவிகா 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மேலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் அது சம்பந்தபட்ட படிப்பில் டிப்ளமோ படித்துள்ளார். இதைபற்றி பிக்பாஸில் சமீபத்தில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க:ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நடிகை விசித்ரா குறைந்தது 12ஆவது வரையாவது படித்து விடு என கூறியதற்கு இதை பற்றி மற்றவர்கள் பேசுவதை நான் விரும்பவில்லை என கூறிவிட்டார். ஆனால் வெளியுலகத்திற்குதான் இவர் படிக்காததுபோல் தோன்றினாலும் ஜோவிகா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய தொழில்களை கற்று வைத்துள்ளதாக வனிதா விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜய்குமார் தனது மகளின் கனவுக்கு எந்தவொரு தடையும் போடவில்லை எனவும் அவள் விரும்பும் பாதையில் அவளுக்கு உறுதுணையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜோவிகா நான் நடிக்க வேண்டும், போட்டோகிராஃபி துறையில் நிறைய கற்று கொள்ள வேண்டும் என கூறியதால் வனிதா விஜய்குமார் நடத்திவந்த துணிக்கடையை மூடிவிட்டு ஜோவிகாவிற்கு ஒரு நல்ல வழியையும் காண்பித்துள்ளார்.

இதையும் படிங்க:விஜய்க்கு கெட் அவுட்டு!.. அஜித்துக்கு கட் அவுட்டா?.. த்ரிஷாவின் ராங்கித்தனம் தாங்கலையே பாஸ்!

அதன்படி இயக்குனர் பார்த்திபனிடம் ஜோவிகாவை படம் இயக்கத்தினை பற்றிய அனுபவத்தினை பெறுவதற்காக சேர்த்து விட்டுள்ளார். இயக்குனர் பார்த்திபனும் சில காலம் ஜோவிகாவிற்கு கற்று கொடுத்துள்ளார். மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால் திரும்பவும் எப்போது வந்தாலும் தன்னிடம் அழைத்து வரும்படியும் இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளாராம்.

இவரிடம் கற்று கொண்ட அனுபவத்தில் ஜோவிகா டெக்னிஷியனாக தனது திறமையை வளர்த்து கொண்டுள்ளார். பிக்பாஸின் தொடக்கவிழாவில் கமல்ஹாசன் ஜோவிகாவிடம் பேச ஆரம்பித்த பொழுதே டெக்னிசியன் ஜோவிகா என குறிப்பிட்டிருந்தார். பள்ளிக்குதான் செல்லவில்லை என்றாலும் தனது திறமையை வளர்த்து கொண்டுள்ள ஜோவிகா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதையும் படிங்க:இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!.. கட்டம் கட்டிட்டாங்க!..

Continue Reading

More in Bigg Boss

To Top