Connect with us

Bigg Boss

படிப்பு வரலன்னா சாகணுமா?!.. மகளுக்காக மல்லுக்கட்டும் வத்திக்குச்சி வனிதா!….

பிக் பாஸ் வீட்டில் நடிகை விசித்ராவுக்கும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவுக்கும் இடையே வெடித்த சண்டை சோஷியல் மீடியாவில் அனலை கிளப்பி உள்ளது. அதற்காகவே திட்டமிட்டு செய்தார்களா? என்பது தனிக்கதை.

வயது வித்தியாசமின்றி விசித்ராவை ஒருமையில் பேசி அலற விட்டுள்ளார் ஜோவிகா விஜயகுமார். ஜோவிகா 9ம் வகுப்பிற்கு பிறகு படிக்க பிடிக்கவில்லை என பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க: செதுக்குனா கூட இந்த சேஃப் வராது!.. சைனிங் உடம்பை காட்டி கிறங்க வைக்கும் விஜே கீர்த்தி..

யூடியூப் சேனல், அம்மாவுடன் சேர்ந்து கொண்டு தனக்கு சினிமாவில் இருக்கும் ஆர்வம் காரணமாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியதாகவும் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகம் ஆக உள்ளதாகவும் வனிதா விஜயகுமாரே கூறியுள்ளார்.

அசுரன் படத்தில் படிப்பு தான் முக்கியம் என்பதை அழுத்தம் திருத்தமாக வெற்றிமாறன் தனுஷ் மூலமாக சொன்ன விஷயத்தை தளபதி விஜய் கல்வி விருது விழா நிகழ்ச்சியிலும் சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: லோகேஷ் இத செஞ்சது ரொம்ப பெருமையா இருக்கு! என்ன ஆண்டவரே நீங்களா இப்படி சொல்றது?

அடிப்படை கல்வி தேவை என விசித்ரா ஜோவிகாவிடம் பேச ஆரம்பிக்க, படிக்க கஷ்டப்பட்டு தற்கொலை செய்துக் கொள்ளணுமா என ஜோவிகா எரிந்து விழுந்து விசித்ராவிடம் சண்டை போட்டது சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்துள்ளது.

அடிப்படை கல்வி 12வது வரை மாணவர்கள் படிக்க வேண்டியது அவசியம் என ஒரு தரப்பினரும், பள்ளியில் சென்று படிப்பது மட்டும் தான் கல்வி என நினைத்துக் கொண்டிருப்பது சரியான ஒன்று அல்ல, மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். அதிக பணத்தை வாங்கிக் கொண்டு பள்ளிக் கூடங்கள் மாணவர்களை தற்கொலை செய்யத் தூண்டும் கல்வியைத் தான் கொடுத்து வருகின்றன. அதற்கு அவர்கள் படிக்காமலே இருக்கலாம் என ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அய்யோ முடியலடா சாமி!.. அயலான் ரிசல்ட்.. இப்பவே கண்ணுக்குத் தெரியுதே!.. பொங்கலோ பொங்கல் தான்!..

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது மகள் படிப்புக்கு எதிராக பேசவில்லை என்றும் படிக்க பிடிக்காதவர்களை ஃபோர்ஸ் பண்ணுவது தான் தப்பு எனக் கூறியுள்ளார் என்றும் படிப்பு வரலைன்னா சாவு முடிவில்லை என ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு தனது மகள் பேசியதற்கு சோஷியல் மீடியாவில் மல்லுக் கட்டி வருகிறார்.

கமல் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சியில் என்ன சொல்லப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top