Connect with us

Bigg Boss

அதுதான்டா உன் வேலை!.. ஒரு மட்டு மரியாதையே தெரியல.. ஒத்த ரோசா பொண்ணை நல்லா வளர்த்துருக்கம்மா!..

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வார இறுதி நிகழ்ச்சியை விட வார நாட்களில் நடக்கும் லைவ் நிகழ்ச்சியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எப்போதாவது சந்தை போடுவதை விட்டுவிட்டு இந்த சீசனில் எப்போதுமே சண்டை போட்டு கன்டென்ட் கொடுக்க ஒவ்வொரு போட்டியாளர்களும் போட்டி போட்டு வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்த நிலையில், தாய் எப்படி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வயதில் மூத்த போட்டியாளர்களை வாடா போடா, ஏய் வா போ என ஏக வசனம் பேசி தனது கேரக்டரை தெளிவாக காட்டி வருகிறார்.

இதையும் படிங்க: ரசிகர்களின் கமெண்ட்டால் கடுப்பான வேல ராமமூர்த்தி… இனி ஆதி குணசேகரனே கிடையாதா..?

முதல் வாரத்திலேயே விசித்ராவின் மூக்கை உடைத்த ஜோவிகா, இன்றைய இரண்டாவது புரோமோவில் பிரதீப் ஆண்டனியை வாடா போடா என பேசி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

வெறும் 18 வயதான ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கூட யாரையுமே மதிப்பு கொடுத்து பேசாமல் வாடா போடா என பேசுவது சரியானதல்ல பிக் பாஸ் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: அடேய் அப்புரசட்டிங்களா இருக்க பிரச்னையில்ல நீங்க வேறயா… கடுப்பான பாக்கியா..!

சாப்பாட்டை வீணடிக்காதே எங்களால் சமைக்க முடியாது என பிரதீப் ஆண்டனி கூற, அதுதாண்டா உன் வேலை, நான் அப்படித்தான் செய்வேன், நீ எனக்கு வேலை செஞ்சு கொடுக்க தான் அந்த ஸ்மால் பாஸ் வீட்டுல இருக்க என அதிகாரத்தின் உச்ச திமிரோடு பேசியுள்ளார்.

கடந்த வாரம் ஜோவிகா பாராட்டிய ரசிகர்கள் அனைவரும் தற்போது, படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது இப்போதுதான் தெரிகிறது. ஒழுங்கா படிக்கலைனா சின்னவங்க பெரியவங்கள மதிக்க கூட தெரியாது. நாகரிகமே இல்லாமல் இப்படிப் பேசத்தான் தெரியும். வனிதா விஜயகுமார் தனது மகளை சூப்பராக வளர்த்துள்ளார் என விளாசி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top