Categories: Cinema News latest news

ஹாலிவுட் பிரமாண்டங்களில் கலக்கும் மலையாள பைங்கிளி.! ஜூராசிக் வேர்ல்ட்.. ஸ்டார் வார்ஸ்…

இந்திய சினிமாவில் நல்ல நடிகர்களாக வளர்ந்து வந்து அதன் பிறகு எதோ சிறிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் படஙக்ளில் நடித்த நடிகர்களை பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், ஒரு இந்திய வாம்சாவளியை சேர்ந்த ஒரு நடிகை, அமெரிக்காவில் கோலோச்சியது தான் இங்கு ஹைலைட்.

அவர் பெயர் வராதா சேது.இவருடைய பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். தம்பதியினராக அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டனர். அங்கு தான் வராதா சேது பிறந்துள்ளார். இந்திய கேரளா வம்சாவளியை சார்ந்தவர்.

அமெரிக்காவில் தியேட்டர் ஆர்டிஸாக இருந்து பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய இவருக்கு, இவரது நடிப்பை பார்த்து பெரிய பெரிய படவாய்ப்புகள் தொடர்ந்து வந்துள்ளன.

இதையும் படியுங்களேன் – ஒழுங்கா லவ் பன்னிரு… இல்லனா மொக்க பையன கல்யாணம் பண்ணி வச்சிருவேன்.! மிரட்டும் சந்தோஷ் நாராயணன்.!

விண்வெளி கதையாக பிரமாண்டமாக உருவான ஸ்டார் வார்ஸ் படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். நவ் யு கேன் சி மீ 2 எனும் ஹாலிவுட் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியான ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தில் உயிரியல் பூங்கா பாதுகாவலராக நடித்துள்ளார்.

இது போக, பல்வேறு ஆங்கில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு நடிகை ஹாலிவுட் ப்ரமாண்டங்களில் நடித்து வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது கனவுக்காக கடுமையாக உழைத்தால் அனைத்தும் சாத்தியம் என்கிறது இந்த நடிகையின் வளர்ச்சி. இவர் தற்போது உன்னிமுகுந்தன் ஹீரோவாக நடிக்கும் மலையாள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Manikandan
Published by
Manikandan