×

நந்தி படக்குழுவோடு சண்டை போட்டேன்... வரலட்சுமி சரத்குமார் சொல்லும் காரணம்

தெலுங்கில் அல்லரி நரேஷ் நடிக்கும் நந்தி படக்குழுவோடு சண்டை போட்டதாகவும் அதற்கான காரணத்தையும் வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்திருக்கிறார். 
 

தமிழில் ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாதபோதும், நெகட்டிவ் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. தமிழில் இவருக்கு இருக்கும் வரவேற்பை விட தெலுங்கில் அதிகம் இருக்கிறது. சமீபத்தில், ரவி தேஜா - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான  கிராக் படத்தில் வரலட்சுமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


அந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டருக்கு இணையாக இவரது கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பை டோலிவுட் ரசிகர்கள் கொடுத்தனர். இந்த வரவேற்பால் வரலட்சுமி திக்குமுக்காடிப் போயிருக்கிறார். இவர் அடுத்ததாக, விஜய் கனகமெடாலா இயக்கத்தில் அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்து வரும் நந்தி படத்தின் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வரலட்சுமி, ``டிரெய்லரில் என்னுடைய வாய்ஸ் இல்லை. ஆனால், படக்குழுவோடு பெரிய சண்டை போட்டு, படத்தில் என்னுடைய கேரக்டருக்கு நானே டப்பிங் பேச அவர்களைச் சம்மதிக்க வைத்தேன்’’ என்று பேசியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News