Categories: Cinema News latest news throwback stories

அந்த விஜய் சேதுபதி இப்ப இல்ல!… வேல ராமமூர்த்தி சொன்ன சூப்பர் மேட்டர்

சில நடிகர்கள் படத்தில் நடித்தால் நடித்தது போலவே இருக்காது. யதார்த்தமாகவும், இயல்பாகவும் நடித்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருப்பார்கள். அப்படி ஒருவர் தான் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி.

இவர் தமிழப்பட உலகில் குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை, சேதுபதி, கிடாரி, கொம்பன், ரஜினி முருகன், அப்பா, வனமகன், தொண்டன், அறம், ஸ்கெட்ச், என்னை நோக்கி பாயும் தோட்டா, என்ஜிகே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பைப் பார்த்தால் நமக்குள் இப்படி ஒரு நடிகனா என்று வியக்கத் தோன்றும். சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க… பாடலில் தெறிக்கவிட்ட வாலி!.. கவிஞருக்கு எம்.ஜி.ஆர் செய்த மிகப்பெரிய மரியாதை!..

மதயானைக்கூட்டம் படத்தில் வீரத்தேவராக வந்து அசத்தியவர் வேல ராமமூர்த்தி. ஆஜானுபாகுவான அவரது தோற்றமும், அந்த பார்வையுமே நம்மை மிரள வைத்து விடும். அதே போல நடிப்பில் படத்துக்குப் படம் புதுப்புதுப் பரிணாமங்களைக் கொண்டு வருபவர் விஜய் சேதுபதி.

யதார்த்தமான நடிப்பும், பேச்சும் இவருக்கு பிளஸ் பாயிண்ட். இந்த இருவரும் சேர்ந்து நடித்தால் அந்தப் படம் எப்படி இருக்கும்? அது தான் சங்குத்தேவன். இந்தப் படம் துரதிர்ஷ்டவசமாக வேளியாகவில்லை. என்றாலும் அருமையான கதைகளத்தைக் கொண்டது.

நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி விஜய் சேதுபதியுடனான தனது அனுபவங்களை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதயானைக்கூட்டம் முடிந்ததும் சங்குத்தேவன் படத்தில் நடித்தேன். தெருக்கூத்து கலைஞன், செவ்வாய் தோஷம்னு ஒரு அருமையான கதை. அதுல தெருக்கூத்து கலைஞன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்போ அந்தப் படத்தோட இயக்குனர் சுதாகருக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே பிரச்சனை.

இதையும் படிங்க… ஒருவழியா முத்துவை வில்லனாக்கியாச்சு… டைரக்டர் மீது காண்டான ரசிகர்கள்…

எடுத்த சீனையே திரும்ப திரும்ப எடுத்து படம் டிராப் ஆயிடுச்சு. அப்போ இருந்த விஜய் சேதுபதி வேற. இந்தப் படம் இப்படி போச்சுப்பான்னு முக்கால்மணி நேரமா கேட்டார். சேதுபதி படத்துல நடிக்க வரும்போது வேற சேதுபதி. நல்ல சேதுபதி. ரணசிங்கம் படத்துல நடிக்க வரும்போது வேற சேதுபதி. உருமாற்றம் குணமாற்றம்னு கார்ல் மார்க்ஸ் சொல்வார். அப்படி இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சேதுபதி படத்துல நடிக்க வரும்போது வேற சேதுபதி. நல்ல சேதுபதி. ரணசிங்கம் படத்துல நடிக்க வரும்போது வேற சேதுபதி. உருமாற்றம் குணமாற்றம்னு கார்ல் மார்க்ஸ் சொல்வார். அப்படி இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v