வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஏகப்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைந்து காணப்பட போவதாக படத்தின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். அதற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.
அதற்காக ஆரம்பத்திலேயே நடிகர் விஜய் லாஸ் விகாஸ் நகரத்துக்கு சென்று வந்திருந்தார். சமீபத்தில் துபாய் வழியாக அமெரிக்காவுக்கு படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் செல்வதாக தகவல்கள் வெளியான நிலையில், விஎஃப்எக்ஸ் பணிகளுக்காகவே நடிகர் விஜய் அங்கு சென்று இருப்பதாக வெங்கட் பிரபு தற்போது அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இங்க நான் தான் கிங்கு!.. சந்தானத்துக்கு சரியான சங்கு!.. கவின் பட முதல் நாள் வசூல் கூட வரலையே!
நடிகர் விஜய்யை இந்த படத்தில் இளமையாகவும் வயதான தோற்றத்திலும் காட்டுவதற்காக விஎஃப்எக்ஸ் பயன்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்குள் சிஜி பணிகள் எல்லாம் நிறைவடைந்து விடுமா என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், தற்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக விஜயின் புகைப்படத்தை வெளியிட்டு வெங்கட் பிரபுட்வீட் போட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிச்சதோ 100.. ஹீரோயினாக 11! நீலாம்பரிக்கே டஃப் கொடுத்த நக்மா.. சுவாரஸ்ய தகவல்
நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி கோட் படத்தின் டீசர் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என மூன்று மாதங்கள் உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மொத்தமாக நிறைவடைந்து செப்டம்பர் 5-ஆம் தேதி படம் எந்த ஒரு தடையுமின்றி வெளியாகும் எனத் தெரிகிறது.
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…