மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கியுள்ள திரைப்படம் மன்மதலீலை. இந்த திரைப்படத்தை மாநாடு படத்தை எடுக்க காலதாமதம் ஆனதால், அதற்கிடையில் எடுக்கப்பட்ட திரைப்படம் மன்மதலீலை.
அசோக் செல்வன், சம்யுக்தா மேனன், ரியா சென், ஸ்ம்ரிதி வெங்கட் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரேம் ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது வெங்கட் பிரபு குறுகிய காலத்தில் எடுத்து முடித்துள்ளார். அதனால் தான் இது வெங்கட் பிரபு கியூக்கி என விளம்பரப்படுத்தியுள்ளார்
இப்படத்தில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர், கிளசம்பஸ் விடியோவும் இளசுகளை வெகுவாக கவர்கிறது. உண்மையில், வெகு நாட்கள் கழித்து ஒரு பக்காவான அடல்ட் காமெடி திரைப்படம் வெளியாக உள்ளது என தெரிகிறது. அசிங்கமான காட்சிகள் எதுவும் இல்லை. அதாவது தவறாக காட்டும், இரட்டை வசனம் அந்த மாதிரி எதுவும் இல்லை. காமத்தை காமெடி கலந்து கூறியிருக்கிறார்களாம்.
தற்போது இப்படத்தில் இருந்து ட்ரைலர் நேற்று வெளியானது. அதில், பக்கா அடல்ட் காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது என தெரிகிறது. அசோக் செல்வன் ஸ்மிர்தி வெங்கட் தம்பதியினர். சம்யுக்தா மேனன் அசோக் செல்வனின் காதலி என தெரிகிறது. இதனால் மாட்டிக்கொள்ளும் அசோக் செல்வன் எப்படி தப்பிக்கிறார் என்பதே மீதி கதை அதனை கலாட்டாவாக காட்டியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – எழுதிட்டு தூக்கி போடுவேன், அத மேஞ்சிட்டு சொல்லணும்.! உங்க திமிர் பேச்சு அடங்கவே செய்யாதா.?!
ஒரு காட்சியில் பேண்ட் போட்டுகொண்டு அதனை ஒழுங்காக மாட்டிக்கொண்டு வீட்டுக்காரர் ஜெயப்ரகாஷ் கிட்ட மாட்டிக்கொள்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த காட்சியெல்லாம் தியேட்டரில் கண்டிப்பாக சிரிப்பலை வரும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஏப்ரல் 1ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…