Categories: Cinema News latest news

லோகேஷ் போல நான் இல்லை… கோட் பட டிரைலரில் குறித்து வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்…

Venkat Prabhu: பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது கோட் திரைப்படம். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வெங்கட் பிரபு விரைவில் வெளியாக இருக்கும் டிரைலர் குறித்து சூப்பர் சீக்ரெட்டை வெளியிட்டு இருக்கிறார்.

விஜயின் சினிமா கேரியரில் கடைசி சில படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சயின்ஸ் பிக்‌ஷன் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

இப்படத்தின் சிங்கிள் சமீபத்தில் ரிலீஸான நிலையில், அடுத்த சிங்கிள் ஜீன் மாதம் விஜயின் பிறந்தநாளில் ரிலீஸாகலாம் எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இறுதிக்கட்ட அப்டேட்கள் கலைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, சோஷியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு தனக்கு தோன்றும் விஷயங்களை ஓபனாக சொல்லக் கூடியவர். அது ரசிகர்களின் கேள்வியாக இருந்தாலும் அதற்கு பதில் அளித்து விடுவார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீபகாலமாக வரும் திரைப்படங்களின் டிரைலர் எல்லாமே ஓவர் பில்டப்பில் இருக்கிறது.

இதையும் படிங்க: அப்பாவை மிஞ்சிடுவாங்க போல! கிரிக்கெட்டர் முதல் பாலிவுட் நடிகர் வரை இத்தனை பிரேக்கப்களா?

அந்த ட்வீட்டில், அப்படியெல்லாம் இல்லை. இதை மாதிரி டிரைலரை கிட்டத்தட்ட எல்லாருமே செய்கின்றனர். அவர் சொல்வது உண்மைதான். நாங்கள் ரெகுலர் கமர்சியல் ட்ரெய்லருக்கு பதில் வேறு விதமாக கொடுத்தால் ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

இதனால் ரசிகர்கள் கோட் திரைப்படத்தின் டிரைலர் வித்தியாசமாக இருக்கும் என தற்போது எதிர்பாரப்பை உருவாக்கி இருக்கின்றனர். சொல்லாதீங்க சார். சீக்கிரம் செஞ்சி ரிலீஸ் பண்ணுங்க எனவும் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் கோட் டிரைலரின் அப்டேட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

அந்த ட்வீட்டைக் காண: https://twitter.com/LetsXOtt/status/1784493185248706603

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily