Connect with us
viduthalai2

Cinema News

விடுதலை2 உருவாக காரணம் வெற்றிமாறனின் அந்த ஐடியா!.. பிரிச்சு மேய்ந்த பிரபலம்.. தேவைதான்!..

Vetrimaran: விடுதலை குறித்து வெற்றிமாறன் பேசி இருப்பது சரியான விஷயம் இல்லை. சினிமாவை சூதாட்டமாக மாற்றி வைத்திருப்பதாக பிரபல திரை விமர்சகர் பிஸ்மி பேசியிருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

விடுதலை நான்கு கோடியில் தொடங்கி 40 கோடி ஆகிவிட்டதாக வெற்றிமாறன் பேசி இருப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லை. என்னதான் சினிமாவை காலை என நாம் வர்ணித்தாலும் அது ஒரு வியாபாரம். ஆனால் தற்போது வியாபாரத்தையும் தாண்டி சினிமா சூதாட்டமாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: Keerthy Suresh: அப்பா வெங்கடாசலபதி கல்யாணம் நல்லபடியா நடக்கனும்.. திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்

ஏன் இந்த படம் 40 கோடியாக மாறியது என்பதற்கும் காரணம் இருக்கிறது. காமெடி நடிகரான சூரி ஹீரோவாக நடிக்க வெற்றிமாறினிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்பொழுது அவருக்கு வெற்றிமாறன் சொன்ன கதை துபாயில் வேலை செய்யும் இளைஞனை சுற்றியது.

படக் குழுவும் துபாய் சென்று  லொகேஷனை பார்த்து வந்து விடுகின்றனர். ஆனால் அந்த நேரத்தில் கொரோனோ லாக்டவுன் வந்துவிடுகிறது. அதன் பின்னர் சூரியை எந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என வெற்றிமாறன் யோசிக்கும் போது விடுதலை படம் அவருக்கு கிடைத்தது.

முதலில் போலீஸ்காரராக சூரி மற்றும் கலியபெருமாள் பாரதிராஜா தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர்கள். சில நாட்கள் ஷூட்டிங் போனது. ஆனால் பாரதிராஜா தன்னுடைய வயதிற்கு இந்த சூழ்நிலையில் நடிக்க முடியாது என இரண்டு, மூன்று நாட்களில் படத்திலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: என்னது! விடாமுயற்சியில த்ரிஷா இவ்வளவு நேரம்தான் வருவாங்களா?.. இதுக்கா இம்புட்டு அக்கப்போரு!..

கிஷோரை அணுக அவராலும் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போகிறது. இதைத் தொடர்ந்து அந்த நேரத்தில் விஜய் சேதுபதி தனக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்த சமயம். அவரிடம் எட்டு நாள் ஷூட்டிங் இருக்கு ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க முடியுமா என கேட்டிருக்கிறார். விஜய் சேதுபதியும் எப்போதும் போல ஒப்புக்கொண்டு நடிக்க வந்து விடுகிறார்.

இதைத் தொடர்ந்து தான் வெற்றிமாறனுக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது. விஜய் சேதுபதி உள்ளே அழைத்து வந்தாகி விட்டது. இந்த கலியபெருமாளுக்கு ஒரு பெரிய பிளாஸ்பேக் வைத்தால் நன்றாக இருக்குமே என யோசிக்கிறார். இதைத்தொடர்ந்து ஸ்கிரிப்ட்டை மாற்றி எழுத படம் இரண்டு பாகங்களாக பிரிந்தது.

இதனால் தான் 8 நாள் சூட்டிங்  தேவை கேட்ட எனக்கு 120 நாள் கிடைத்ததாக வெற்றிமாறன் பேசியிருக்கிறார். விடுதலை முதல் பாகம் தோல்வியடைந்திருந்தால் தயாரிப்பாளரின் நிலை மோசமாக மாறியிருக்கும். ஆனால் அப்பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக இப்பாகம் மிகப்பெரிய வெற்றியடையும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top