×

வேட்டைக்காரன் பட இயக்குநர் பாபு சிவன் மரணம்!

இயக்குநர் பாபு சிவன் உடல்நல குறைவால் காலமானார்.

 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2009ல் வெளியான படம் வேட்டைக்காரன். விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த இப்படத்தை பாபு சிவன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விஜய் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் இயக்குனர் பாபு சிவன்  உயிரிழந்துட்டார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைபாட்டினால் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே மரணித்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது இறப்பிற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையை சேர்ந்த சக கலைஞர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு வயது 54 என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News