Connect with us
Vettaiyan

Cinema News

வேட்டையன் வெறும் கபாலி இல்லையாம்… அதையும் தாண்டி..! வில்லன் நடிகர் கொடுத்த சூப்பர் அப்டேட்…

ரஜினிகாந்த் நடிப்பில் 170வது படம் வேட்டையன். இந்தப் படத்தின் வில்லனாக ராணா டகுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளாராம். படத்தைப் பற்றி அவர் கூடுதலாக என்னென்ன தகவல்கள் சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.

வேட்டையன் படத்தின் கதையை வில்லன் ராணா இந்தப்படம் ரஜினி இதுவரை நடிக்காத சமூக அக்கறை உள்ள திரைப்படம். ரொம்பவே வித்தியாசமான படம் என்கிறார். தொழில்துறை, நீதித்துறை, காவல்துறை என மூன்றையும் பற்றிப் பேசும் படம். ஜெய்பீம் படத்தின் சாயலும் இந்தப் படத்தில் இருக்க வாய்ப்புகள் இருக்கிறதாம். இந்தப் படத்தின் கதையை அரசல் புரசலாகக் கேட்ட ரசிகர்கள் கபாலி மாதிரி இருக்கே என்றார்களாம். ஞானவேல் ராஜா ஏற்கனவே ஜெய்பீம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க… கண்ணதாசன் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்னால் என்ன வேலை செய்தார் தெரியுமா?

இது வழக்கமான ரஜினி படம் இல்லை என்று சொல்லும் ராணா, இது போன்ற படத்தை அவர் தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் நடித்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார். ராணா என்றதுமே பாகுபலி தான் நம் நினைவுக்கு வரும். மனுஷன் ரொம்பவே நம்மை மிரட்டி கதிகலங்கச் செய்திருப்பார்.

Rana, Rajni

Rana, Rajni

இந்தப் படத்தில் ரஜினிக்கு சரிசமமான வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் என்றே தோன்றுகிறது. சமீபகாலமாக ரஜினி தனக்கு சரிசமமாக வில்லனின் கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படித் தான் ஜெயிலரும் இருந்தது. மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது வேட்டையனும் அந்த வகையில் தான் ரசிகர்களுக்கு விருந்தாக வரப்போகிறது.

இதையும் படிங்க… மகளுக்காக 20 நிமிடங்களில் சிவாஜி காட்டிய 36 முகங்கள்… மனுஷன் பின்னிட்டாரய்யா…!

ரஜினிகாந்த் ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு நடிக்க உள்ள படம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத்பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், கிஷோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைத்துள்ளார். பல வெற்றிப்படங்களைக் கொடுத்த லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top