தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் இவரளவுக்கு அவமானங்களை கடந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். இந்த மூஞ்சிய காசு கொடுத்து பாக்கணுமா என எழுதிய பத்திரிகையிலேயே இவர் தான் நம்பர் 1 நடிகர் என எழுத வைத்தவர் தான் தளபதி விஜய்.
இவர் ஆரம்பத்தில் கல்லூரி படிப்பை முடித்து நடிப்பு தான் தனது வேலை என முடிவு செய்து வைத்து விட்டாராம். இவரது ஆரம்ப கால சம்பவங்களை விஜயின் உறவினரும், மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ அண்மையியல் கூறுகையில்,
இதையும் படியுங்களேன் – அடுத்த படத்திற்கு சம்பளமே வேண்டாம்.! அனிருத்தின் அதிரடி முடிவு.! பின்னணியில் பலே திட்டம்…
விஜய் கல்லூரி படித்த காலகட்டம் அது. அப்போது அவரது அம்மா, எனது அக்கா என்னிடம் , ‘ உன் கம்பெனில விஜய்க்கு ஏதாவது வேலை இருந்தா அவனுக்கு கொடு ‘ என கூறினாராம். உடனே விஜய் எனக்கு நடிப்பு தான் பிடித்துள்ளது. நான் நடிகனாக தான் வருவேன்.’ என அப்போதே திடமாக கூறினாராம் தளபதி விஜய்.
இதனை அந்த நேர்காணலில் கூறியிருந்தார் சேவியர் பிரிட்டோ. சிறு வயது முதலே நடிப்பிற்காக பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்து விட்டாராம் விஜய். நடிப்பு தான் எல்லாமே அதற்காக நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டுமே என பயிற்சி எடுப்பாராம்.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…