Connect with us

Bigg Boss

தப்பா நடந்துக்கிட்ட நடிகர் யார்?… கடைசியில் உண்மையை உடைத்த விசித்ரா…

Vichithra: நடிகை விசித்ரா கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை பாதித்த ஒரு நிகழ்ச்சியாக நடிகர் தன்னுடம் தவறாக நடக்க முயன்றதை சொல்லி இருப்பார். இப்போ பிக்பாஸ் முடிந்து இருக்கும் நிலையில் அந்த நடிகர் யார் என்ற தகவலை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

நிகழ்ச்சியில் விசித்ரா பேசியதில் இருந்து, முன்னணி நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஷூட்டிங்கில் அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் என் பெயரை கூட கேட்காமல் ரூமுக்கு வர சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அந்த நடிகர் அவர் ஆட்களை வைத்து இரவு முழுவதும் என் ரூமை தட்ட வைத்தார். 

இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.

அதுப்போல ஒருநாள் அந்த ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சி எடுத்தார்கள். ஆனால் அங்கிருந்த சண்டை கலைஞர் என்னை தவறான முறையில் தொட்டார். இதை மாஸ்டரிடம் சொன்னபோது அவர் என்னை அறைந்து விட்டார். எங்க யூனியனில் இது குறித்து புகார் கொடுத்த போது அவர்களும் இதை விட்டு வேற வேலையை போய் பாரும்மா என்றார்கள். ஒருவர் கூட என்னுடன் நிற்கவில்லை. இதனால் தான் நடிப்பில் இருந்து வெளியேறினேன் என்றார். 

இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும், தெலுங்கில் வெளியான பாலவடிவி பாசு படத்தில் தான் இது நடந்து இருக்கலாம். அந்த ஸ்டண்ட் மாஸ்டர் அ. விஜய் என்றும், புகாரை எடுக்க மறுத்த சங்க தலைவர் ராதா ரவி என்றும் ரசிகர்கள் சரியாக கணித்தனர். இந்நிலையில், வெளிவந்து இருக்கும் விசித்ரா அந்த நடிகர் யார் என்று தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கடைசி வரை துணையாக நின்ற பவதாரிணி கணவர்… கடைசி நாளில் என்ன நடந்தது? உண்மைகளை உடைக்கும் உறவினர்

அந்த பேட்டியில் இருந்து, நான் பிக்பாஸில் சொன்னது மில்லியன் கணக்கான மக்களுக்கு செல்ல வேண்டும் என்று தான். அது பலருக்கு உத்வேகமாக இருந்து இருக்கும். நான் யார் பெயரையுமே சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அக்குவேறாக தகவலை எடுத்துவிட்டனர். அவர்கள் எடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் பெயர்கள் எதையும் குறிப்பிடவில்லை என்றார்.

அது நிஜமான விஷயம் தான். என்னுடைய வாழ்க்கையில் இன்னும் கருப்பு புள்ளியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். இப்படி விசித்ரா பேசி இருக்கையில் அந்த நடிகர் பாலகிருஷ்ணா தான் என ரசிகர்கள் தற்போது முடிவாக கன்பார்ம் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top