Categories: Cinema News latest news

கோட் விஜய்யை விடுங்க!.. அஜித் எவ்ளோ யங்கா மாறிட்டாரு பாருங்க!.. விடாமுயற்சி டீமோட செம பிக்ஸ்!..

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்கை பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் வெளியிட்டுள்ளார். துணிவு படம் வரை அஜித்தின் தோற்றம் சற்றே பருமனாக இருந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்காக கடுமையாக டயட் பிளான் மற்றும் வொர்க்கவுட் செய்து உடல் எடையை அஜித் கணிசமாக குறைத்துள்ளார் என்றே தெரிகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் முழுக்க முழுக்க அஜர்பைஜானிலேயே விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. தமிழ் படம் போல இருக்குமா? அல்லது இங்கிலீஷ் படம் போல இருக்குமா? என்றே ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ராமருக்கு பாட்டுப் போட்ட ராமராஜன் ஜோடி!.. லேடி சூப்பர்ஸ்டாரும் ஒரு பாட்டுப் போடுவாரா?..

இந்த படத்தில் பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஆரவ்வுடன் அஜர்பைஜானில் சுற்றி பார்க்க கிளம்பிய நடிகர் அஜித் குமார் டிசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு செம யங்காக இருக்கும் புகைப்படங்களை ஆரவ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார்.

அஜர்பைஜானில் உள்ள பாக்கு நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட போட்டோக்களை ஆரவ் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தல தரிசனத்தை காட்டி வருவதற்கு ரொம்பவே நன்றி ப்ரோ என அஜித் ரசிகர்கள் ஆரவ்விற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பேன்டாவுக்கு ஆப்பு வச்ச சந்தானம்!.. ஆனாலும் ரகசியமா உதவும் உதயநிதி ஸ்டாலின்.. எப்படி தெரியுமா?..

விரைவில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடியப் போகிறது என்றும் மே 1ம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M
Published by
Saranya M