Categories: Cinema News latest news

ஒரு வழியா விட்டாங்க அப்டேட்டு… அஜித்தின் விடாமுயற்சி படக்குழு சொன்ன சூப்பர் தகவல்… கடுப்பான ரசிகர்கள்!

சமீபகாலமாகவே அஜித்தின் ஒரு படம் முடிந்து வெளிவருவதற்குள் ரசிகர்கள் அப்டேட் கேட்டே நொந்து விடும் நிலை தான் இருக்கிறது. அந்த அளவுக்கு படம் லேட்டாகி ஊரில் இருக்கும் எல்லா செலிபிரிட்டியிடம் எல்லாம் அப்டேட் கேட்டு அட்ராசிட்டி அதிகமாகி விடுகிறது.

இந்த பிரச்னை தொடங்கியது அஜித்தின் வலிமை படத்தில் தான். அப்டேட் கிடைக்காமல் இந்திய கிரிக்கெட் மேட்சில் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கோஷமிட்ட சம்பவம் எல்லாம் நடந்தது. அந்த படம் அப்படி இப்படி என ரிலீஸாகி பெரிய ஹிட் இல்லை என்றாலும் நல்ல வசூலை தான் பெற்றது.

இதையும் படிங்க: ‘பாசமலர்’ பட வெற்றிக்கு முக்கியமான காரணம்! சிவாஜியோ சாவித்ரியோ இல்ல – பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரெட்

துணிவு படத்துடன் பொங்கல் தினத்தில் மோதிய விஜய் தனது படத்தின் வேலைகளையே முடித்து விட்டார். படமும் வரும் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. ஆனால் விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கூட இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனால் மறுபடியும் ரசிகர்கள் அப்டேட் கேட்க தொடங்கினர்.

இதையும் படிங்க: ஜெயிலர் பாட்டுக்கு லெஜெண்ட் சரவணா போட்ட மெர்சல் டேன்ஸ்!. நீ செம மாஸ் தலைவா!…

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நடிகை தமன்னா இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தாலும் இன்னமும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் விடாமுயற்சி அடுத்த மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என் பக்கம் நியாயம் இருக்கு!.. திரும்பி எல்லாம் போக முடியாது.. மாரிசெல்வராஜ் ஆவேசம்..

Published by
Shamily