×

தனி விமானத்தில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் - தீயாய் பரவும் புகைப்படம்

 
தனி விமானத்தில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் - தீயாய் பரவும் புகைப்படம்

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர்.

படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், விரைவில் திருமணம் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், எதற்கும் அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில், தனி விமானத்தில் இருந்து இருவரும் இறங்கி செல்லும் புகைப்படத்தை விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News