Categories: Cinema News latest news

ரஜினி மூலம் நெல்சனை பழிவாங்க காத்திருக்கும் விஜய்.! பின்னணியில் பக்கா பிளான்..,

தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த இயக்குனர்  நெல்சன் இயக்கி இருந்தார்.

அந்த இரு படங்களை பார்த்து, அவரது கதைக்களத்தில் இம்ப்ரெஸ் ஆகி பின்பு தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் , நெல்சனுக்கு கொடுத்துள்ளார். ஆனால்,  முந்தைய படங்களில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் குறைந்துவிட்டது. அதனால், பீஸ்ட் படத்தில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் விஜய் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்  விஜய். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இதையும் படியுங்களேன் – நம்ம அண்ணாச்சி மனசு வச்சதுனால கமலுக்கு கிடைத்த பெரும் நிம்மதி.!? இல்லனா அவ்வளோதான்.!

அதே நேரம், தலைவர் ரஜினிகாந்தை வைத்து பீஸ்ட் நெல்சன் புதிய படம் இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கி  ஜனவரி பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அறிந்த சினிமா வாசிகள், பீஸ்ட் மூலம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த நெல்சனை பொங்கலில் ரஜினி படம் மூலம் வச்சி செய்துவிடலாம் என முன்னாடியே விஜய்  பொங்கல் தினத்தை புக் செய்துவிட்டார் போல என சிலாகித்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan