தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான் என்பதில் தற்போது எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்தளவுக்கு அவரது மார்க்கெட் உச்சம் தொட்டுவிட்டது.
அவர் ஆரம்ப காலகட்டங்களில் பல்வேறு அவமானங்களை கடந்து, பிறகு தனக்கு எது வரும், ரசிகர்கள் நம்மிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள், நாம் எதனை மெருகேற்றி கொள்ளவேண்டும் என கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
அப்படி அவர் ஆரம்ப காலகட்டத்தில் கொடுத்த ஒரு நேர்காணல், தற்போது வைரலாகிறது. அதில், விஜய், ‘ எனக்கு இல்லை என் ரசிகர்களுக்காக நான் இயக்குனர்களிடம் கேட்டுள்ளேன். எனக்கு ஒரு குத்து பாட்டு வேணும். அதே போல, எனக்கு 2 சண்டை காட்சிகள் வேணும் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள் என கேட்பேன் என கூறியிருந்தார்.
இதையும் படியுங்களேன் – 10 ஆண்டுகள் படுக்கையறை என்ஜாய்… இப்போ மீடூ புகாரா.?! கொந்தளித்த சர்ச்சை நாயகி ரேகா.!
அதே போல, அண்மையில் ஒரு பேட்டியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‘ மாஸ்டர் படத்தில் கதைக்காக தேவைப்பட்டது, அந்த பசங்க தூக்கில் தொங்கும் போது, வரும் பாடல் மட்டுமே. வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் ரசிகர்களுக்காக வைத்தது தான். தளபதி 67ல் பாடல்கள் இருக்குமா என்பது அறிவிப்பு வெளியானால் தான் தெரியும். ‘ என விஜய் கூறியதற்கு ஒத்துப்போவது போலவே பேசியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…