Categories: Cinema News latest news

மாசத்துக்கு ஒருமுறையாவது விஜய் இதை செய்யணும்….கண்ணீர் விட்ட எஸ்.ஏ.சி…

தமிழ்  சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக உச்சம் தொட்டுவிட்டார் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது உச்சம் தொட்டு தொட முடியாத உயரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் ஆரம்பத்தில் பல தொளிவிகளையும், அவமானங்களையும் தாங்கி தான் தன்னை மெருகேற்றி இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

இவரது வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு இவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உண்டு. ஆரம்பத்தில் விஜய் அறிமுகமாகி, வளர்ந்து வந்த காலத்தில் விஜய்யை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கியது ஆகட்டும், அவருக்கு ஒரு ஹிட் கொடுக்க தரமான கதைகளை தேர்வு செய்ததாகட்டும் எஸ்.ஏ.சிக்கு முக்கிய பங்குண்டு.

ஆனால், எனோ சில காரணங்களால் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. அது வெளியிலும் தெரிய ஆரம்பித்தது. தனது விஜய் மக்கள் இயக்கத்தினர் தனது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு கேட்க கூடாது என பல ஸ்ட்ரிக்ட் கட்டளைகள் பறந்ததாகவும்  கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – மீண்டும் ஷூட்டிங் கிளம்பிய லோகேஷ் – கமல்.! விக்ரம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.?

இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், எங்களுக்கு ( எஸ்.ஏ.சி மற்றும் அவரது மனைவியும் விஜயின் அம்மாவுமாகிய ஷோபனா ) ஒரே ஒரு ஆசை தான். அதாவது விஜய் எங்கள் வீட்டிற்கு மாதம் ஒரு முறையாவது வர வேண்டும். ஒரு அரை மணிநேரம் பேச வேண்டும் என மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்தார்.

இதன் மூலம் தற்போது விஜய் , தனது தந்தையை பார்க்க செல்வதே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பேட்டியை பார்த்தாவது, விஜய் தனது பெற்றோரை தேடி சென்று பார்த்திருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Manikandan
Published by
Manikandan