அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை வைத்து தமிழ்ப் படம், தமிழ் படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
காமெடி படங்களை அரசியல் மற்றும் சினிமா நய்யாண்டி கலந்து இயக்கி பிரபலமான சி.எஸ். அமுதன் இந்த படத்தை பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த நிலையில், ஒரு வழியாக தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது.
இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரேயடியா சோப்பு போட்ட சன் பிக்சர்ஸ்!.. உங்க சங்காத்தமே வேண்டாம்னு முடிவு பண்ண விஜய்!..
நடிகர் விஜய் ஆண்டனி நீண்ட தாடியுடன் ஒரு லுக்கிலும் க்ளீன் ஷேவ் பண்ண ஸ்மார்ட்டான லுக்கிலும் நடித்து ஈர்க்க வைக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அட்டகத்தி, இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்த பழைய பீஸ் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்.
அவரை பார்த்த உடனே அந்த மரமா என ரசிகர்கள் அவ்ளோ பழைய படமா இது என கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில், கொலை எனும் படத்தின் மூலம் ரசிகர்களை கொலையாக கொன்ற விஜய் ஆண்டனி அடுத்த சம்பவத்திற்கு தயார் ஆகிட்டாரு டோய் என ரசிகர்கள் அலர்ட் ஆகி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு வேற வழியே இல்லை!.. தலைவரை ஊறுகாய் போல தொட்டுக்கத்தான் போறாரு!.. கலெக்ஷன் முக்கியம் பிகிலு!..
தற்போது வெளியான ட்ரெய்லரில் எந்தவொரு சீனும் புதிதாகவோ ஈர்க்கும் படியோ இல்லை என்பது ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது. மேலும், விஜய் ஆண்டனியின் அந்த தாடி சரியாக முகத்துக்கு செட்டே ஆகவில்லையே என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரத்தம் ரத்தம் என்கிற பாடல் மட்டும் படத்தின் டிரெய்லரில் சிறப்பாக உள்ளது என்றும் விரைவில் என இப்போதும் போடுறீங்களே சீக்கிரம் ரிலீஸ் தேதியை சொல்லுங்க பாஸ் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…