Categories: Cinema News latest news

சந்திக்க விரும்பிய முதல்வர்… எஸ்கேப் ஆகி ஓடிவந்த விஜய்.. பின்னணி என்ன?….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை இளைய தளபதி என அழைத்து வருகின்றனர். ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் அவரின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் தொடர்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

விஜய் கண்டிப்பாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என கணிக்கப்படுகிறது. விஜயை அரசியலோடு தொடர்புபடுத்தி போஸ்டர் ஒட்டுவதை அவரின் ரசிகர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க.. மேக்கப் இல்லாம இப்படித்தான் இருப்பாரா?.. ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்….

இந்நிலையில், விஜயை சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்பினாராம். ஒருவேளை விஜயுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆம் ஆத்மியை வலுப்படுத்த அவர் திட்டமிட்டாரா தெரியவில்லை. ஆனால், நாசுக்காக அதை தவிர்த்து விட்டு சென்னை திரும்பிவிட்டார் விஜய்.

ஒருபக்கம், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் அவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.

இதையும் படிங்க: விருது இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்? – லீக் செய்த பிரபல நடிகை….

ஆனால், விஜய், அஜித் ஆகிய இருவரும் இன்னும் அவரை சந்திக்கவில்லை. தமிழக முதல்வரையே சந்திக்காத நிலையில், டெல்லி முதல்வரை சந்தித்து பேசினால் சர்ச்சை எழும் என்பதால் விஜய் அந்த சந்திப்பை தவிர்த்துவிட்டாரா என தெரியவில்லை.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா