Categories: Cinema News latest news

விஜய் கால்ஷீட் மட்டும் போதுமா.?! வெளுத்து வாங்கிய தளபதியின் பாசத்தந்தை.!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பு ஏற்படுத்திய தாக்கம், தமிழகத்தில் கே.ஜி.எப் 2 எனும் பிரமாண்டத்தை நினைக்கவைக்கவே இல்லை.

ஆனால், ரிலீசுக்கு பிறகு நிலமை தலைகீழானது. முதல் 5 நாள் அந்த விடுமுறை முன்பதிவை அடுத்து பல திரையரங்குகள் கே.ஜி.எப் 2 வசமாகின. பீஸ்ட் படத்திற்கு கூட்டம் குறைந்து கே.ஜி.எப் 2 ராக்கி பாயை திரையில் காண மக்கள் வரிசையில் நின்றனர்.

பீஸ்ட் படத்தின் இந்த நிலைமையை கண்ட ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை இணையத்தில் திட்டி தீர்த்தனர். பலர் நெல்சன் அடுத்து இயக்க உள்ள ரஜினி படம் என்னவாகுமோ என பதறினர். இருந்தாலும், நெல்சன் மெது பலர் நம்பிக்கை வைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன் –  தளபதி விஜயை அசிங்கப்படுத்திய சன் பிக்ச்சர்ஸ்.! கடும் கோபத்தில் ரசிகர்கள்.!

இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் இதே வேளையில், தற்போது விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் விஜயின் பீஸ்ட் ரிசல்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ளாராம்.

அதாவது, இயக்குனர்கள் பெரிய நட்சத்திரங்களின் கால்ஷீட் வாங்குவதை மட்டும் குறியாக வைத்திருக்க கூடாது. அதே போல,  கதை திரைக்கதையிலும் முழு கவனம் செலுத்த வேண்டும் என கருத்து கூறியுள்ளார்.

Manikandan
Published by
Manikandan