Categories: Cinema News latest news

சும்மா நெருப்பு மாறி இருக்கீங்க சார்.! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த விஜய்.!

தமிழ் திரையுலகில் அடுத்து ரசிகர்களில் பேராதரவான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள திரைப்படம் என்றால் அது பீஸ்ட் திரைப்படம் தான். ஏப்ரல் ம் 13ஆம் தேதி எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்திலிருந்து சில புகைப்படங்கள், 2 பாடல்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியான அத்தனையும்  ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.  ரசிகர்களுக்கு பெரிய வருத்தம் என்றால், விஜய் படத்திற்கு வழக்கமாக நடக்கும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.

இந்த படத்தில் இருந்து சில போட்டோஷூட் புகைப்படங்கள் திடீரென வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. இதுமட்டுமல்ல இந்த படத்திலிருந்து எது வெளியானாலும் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் – உங்களுக்கு 56 வயசா.?! ஒரு பய நம்பமாட்டான்.! வெறித்தனமான போட்டோ உள்ளே…

அப்படித்தான் தற்போது ஒரு புகைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விஜய் துப்பாக்கியுடன் யாரையோ மிரட்டுவது போல குறிவைத்துள்ள்ளார். அதில் இவர் மிகவும் பிட்டாக இருக்கிறார். துப்பாக்கி படத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே தீயாய் இருகிறார் என ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan