Categories: Cinema News latest news Review

என்னடா ரவுடி ஹீரோவுக்கு வந்த புது பிரச்சனை… லைகர்-ஐ கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்.. டிவிட்டர் விமர்சனம் இதோ…

அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படம் மூலம் இந்தியா முழுக்க தெரிந்த முகமாக மாறினார் விஜய் தேவரகொண்டா. அதுவும் ரவுடி ஹீரோ என ரசிகர்கள் தாண்டி பெண் ரசிகைகள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

அடுத்ததாக பெண் ரசிகைகளுக்கு ஏற்றறார் போல கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தில் நடித்து இன்னும் அதிக ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு சில படங்கள் நடித்தாலும், முந்தைய படங்கள் அளவுக்கு ஹிட் ஆகவில்லை.

 இன்று அவர் நடிப்பில் லைகர் எனும் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகை சார்மி தயாரித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஹீரோயினாகவும், ரம்யா கிருஷ்ணன் ஹீரோ அம்மாவாகவும், பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் வில்லனாகவும் நடித்துள்ள்ளனர்.

இதையும் படியுங்களேன் – விக்ரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.! ஏ.ஆர்.ரகுமான் செய்த தரமான சம்பவம் இதோ…

இப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் இணையத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். படத்தில் முதல் பாதியாவது கொஞ்சம் தேறுவது போல இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி சுத்தமாக நன்றாக இல்லை. ரம்யா கிருஷ்ணன் எதற்காக இப்படி ஒரு கதையை ஓகே செய்தார் என தெரியவில்லை.

இதையும் படியுங்களேன் – அடிக்கடி கருக்கலைப்பு… ஓவியாவின் ஒல்லி உடம்பிற்கு இதுதான் காரணம்.. சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்.!

உலக சாம்பியன் மைக் டைசனை, இறுதி காட்சியில் ஒரே அடியில் விஜய் தேவரகொண்டா  அடித்து நாக் அவுட் செய்வதெல்லாம் நம்பும் படியாக இல்லை என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். பல சூப்பர் ஹிட் , மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகநாத் இந்த முறை பெரிய பட்ஜெட்டில் ஏமாற்றிவிட்டார். நன்கு கதைக்களத்தை அமைத்து விட்டு பட ஷூட்டிங் சென்றிருக்கலாம். கோடிகளை இப்படி வேஸ்ட் செய்துவிட்டாரே என புலம்பி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan