Categories: Cinema News latest news

லியோ வெற்றி விழாவில் ரஜினிகாந்தை வம்பிழுத்த ரத்னகுமார்!.. தலைவர் 171 பக்கம் தலைவைக்க முடியாதே!..

லியோ வெற்றி விழாவில் ஆடை படத்தின் இயக்குநரும் லியோ படத்தின் துணை கதை ஆசிரியருமான ரத்னகுமார் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரத்னா தாஸ் என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் அவர் பேசிய விஷயங்களையும் நடிகர் விஜய் அவரை வந்து கட்டியணைத்த வீடியோவையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பலரும் பாட மறுத்த அந்த பாடல்!.. அசால்ட்டா பாடி அசர வைத்த பாடகி எஸ்.ஜானகி!…

லியோ படத்துக்காக ஆரம்பத்தில் இருந்து லோகேஷ் கனகராஜுக்கு பக்க பலமாக இருந்து வரும் ரத்னகுமார் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கழுகு கதையை நடிகர் ரஜினிகாந்த் சொன்ன நிலையில், லியோ படத்தில் அதை காட்சியாக வைத்ததே ரத்னகுமார் தான் என சர்ச்சை கிளம்பியது.

இதையும் படிங்க: லியோ பட விழாவில் நடந்த மாபெரும் மோசடி!.. அடுத்த ரஹ்மான் நிகழ்ச்சியாக மாறிய சக்சஸ் மீட்…

இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவில், எவ்வளவு தான் உயர பறந்தாலும் பசிச்சா கீழ இறங்கி வந்து தான் ஆகணும் என ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்குவது போல ரத்னகுமார் சொன்ன கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ரத்னகுமார் பேசி முடித்த பின்னர் நடிகர் விஜய்யை கட்டிப் பிடிக்க வேண்டும் என கீழே இறங்க நினைத்தார். அப்போது நடிகர் விஜய்யே மேடைக்கு வந்து ரத்னகுமாரையும் தீரஜ் வைத்தியையும் கட்டி அணைத்து விட்டு சென்றுள்ள காட்சிகள் பரவி வருகின்றன.

தலைவர் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் போது ரத்னகுமார் அதில் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M
Published by
Saranya M