Connect with us

Cinema News

காக்கா – கழுகு கதை விஜய்யை எந்தளவுக்கு பாதிச்சிருக்குன்னு பாருங்க!.. வெற்றி விழாவிலும் புலம்பிட்டாரே!..

லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் இறுதியாக மேடை ஏறி பேசிய நடிகர் விஜய் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கழுகு குட்டி ஸ்டோரிக்கு பதில் கொடுக்கும் வகையில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லு தனது மனதை தேற்றி உள்ளார்.

காக்கா கழுகு குட்டி கதையை நடிகர் ரஜினிகாந்த் சொன்ன உடனே இது எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், நடிகர் விஜயை குறிப்பிட்டுதான் ரஜினி சொன்னார் என பலரும் விவாதத்தை கிளப்பினர்.

இதையும் படிங்க: இந்திய சினிமாவே இன்னைக்கு விஜய்யை திரும்பி பார்க்குது!.. லியோ வெற்றி விழாவில் அர்ஜுன் செம ஸ்பீச்!..

லியோ படத்தில் கிளைமாக்ஸில் அந்த கழுகு காட்சி இடம்பெற்றது நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுக்கத்தான் என பலரும் விமர்சித்து இருந்தனர். லியோ வெற்றி விழாவில் ரத்னகுமார் முதலில் அந்த காக்கா கழுகு பிரச்சனையை பேச ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜய் அதை தவிர்த்து விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ”ஒரு காட்டுல ரெண்டு பேரும் போயிட்டு இருந்தாங்க அங்க சிங்கம், புலி, யானை, மான், மயில், காக்கா , கழுகு” என விஜய் சொன்ன உடனே ஒட்டு மொத்த அரங்கமும் கத்த தொடங்கியது. நடிகர் விஜய் கொஞ்ச நேரம் ரசிகர்களுக்கான ஸ்பேஸ் கொடுத்து விட்டு, ஒருத்தர் வில் அம்போட போய் முயலை வேட்டையாடிட்டு வந்தாரு.. இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வைத்தார். ஆனால், அவர் வெறுங்கையோடு திரும்பி வந்தார். இதில் யார் வெற்றியாளர்.. யானைக்கு குறி வச்சவர் தான் வெற்றியாளர்.. பெருசா கனவு காணுங்க என குட்டி ஸ்டோரி சொல்லி உள்ளார்.

இதையும் படிங்க: லியோ வெற்றி விழாவில் ரஜினிகாந்தை வம்பிழுத்த ரத்னகுமார்!.. தலைவர் 171 பக்கம் தலைவைக்க முடியாதே!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top