Connect with us

Cinema News

இத்தனை பேரும் ஓட்டுப்போட்டா சிஎம் ஆகிடுவாரோ?.. தலைவர் ஆனதும் ரசிகர்களை முதன்முறையாக சந்தித்த விஜய்!

கட்சி அறிவிப்பையே தனியாக மண்டபம் எல்லாம் பிடித்து பிரம்மாண்ட நிகழ்ச்சி எல்லாம் நடத்தி அறிவிக்காமல் வெறும் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டே அறிவித்த புகழ் விஜய்க்குத்தான் சேரும். இந்நிலையில், கட்சி அறிவிப்புக்குப் பின்பு நல்லா ஒரு சன்டேவா பார்த்து சந்தித்தால் லீவில் உள்ள ரசிகர்கள் எல்லாம் படையெடுத்து வந்து விடுவார்கள் என பக்காவாக பிளான் போட்டு இன்று மீண்டும் கோட் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ரசிகர்களை சந்தித்திருக்கிறார் தலைவர் விஜய்.

தமிழக வெற்றி கழகம் என கட்சியை பெயரை டெல்லிக்கு சென்று புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்து விட்டு வந்ததும் சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்தார். மேலும், ஏற்கனவே கமிட்டான இன்னொரு படத்தை முடித்துக் கொடுத்து விட்டு நடிக்க மாட்டேன் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய இசையமைப்பாளரை பழிவாங்கிய வாலி!.. கவிஞருக்கு இவ்வளவு கோபம் கூடாது!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தில் அதிகமாக மகன் விஜய்க்குத் தான் ஸ்கோப் இருக்கிறது என தெரிகிறது. மீசை இல்லாத லுக்கில் அதிக நாட்கள் நடித்து வரும் விஜய் பொங்கலுக்கு பின்னர் மீண்டும் இன்று ரசிகர்களை சந்தித்துள்ளார். இதற்கு முன் இல்லாத அளவுக்கு ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும் செல்ஃபி வீடியோ பல கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கி இருக்கும் என்றே தெரிகிறது.

அத்தனையும் இளைஞர்கள் கூட்டம் இன்றைய மற்றும் நாளை வாக்காளர்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக விஜய் கவர்ந்து விட்டால் பெரியளவில் வெற்றியடைவார் என்றே தெரிகிறது. கூடிய சீக்கிரமே கோட் பட சூட்டிங் முடிந்து இந்த ஆண்டு படம் ரிலீஸ் ஆகும் போது மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் நிகழ்ந்தும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷுடன் நேரடியாக மோதிய சிவகார்த்திகேயனின் 16 படங்கள்!.. ஜெயிச்சது யார் தெரியுமா?..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top