Connect with us
vijay ajith

Cinema News

மங்காத்தா ஹிட்டை ட்ரீட் வைத்து கொண்டாடிய விஜய்!.. என்னப்பா சொல்றீங்க!..

நடிகர்கள் அஜித்குமாரும், விஜயும் பல வருடங்களாகவே போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். இருவரும் ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவில் நுழைந்தார்கள். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் கதைகளுக்கு மாறி ஒரு கட்டத்தில் மாஸ் ஹீரோவாக மாறியவர்கள்.

அஜித் ஸ்டைலீஸ் ஹீரோவாக மாறினார் விஜயோ அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். அஜித் கோட் சூட் அணிந்து நடந்து வந்தே கல்லா கட்டினால் விஜயோ சூப்பராக நடனமாடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அஜித் தல-யாக மாறும்போது விஜய் தளபதியாக மாறினார்.

இதையும் படிங்க: ‘மின்சாரக்கண்ணா’ படத்திற்கு பிறகு விஜய், கே.எஸ். ரவிக்குமார் சேராததற்கு இதுதான் காரணமா?

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் ஆகியோருக்கு எப்படி தொழில் போட்டி இருந்ததோ அது போலவே விஜய் – அஜித் போட்டி உருவானது. ஒருபக்கம், இரண்டு பேரின் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொண்டு வருகின்றனர். விஜயை அஜித் ரசிகர்கள் அணில் என விமர்சிப்பதும், விஜய் ரசிகர்கள் அஜித்தை ஆமை என நக்கலடிப்பதும் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

இது தொடர்பாக இருவருமே எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை. விஜய் படம் தொடர்பான ஒரு அப்டேட் வெளியானால் அஜித் உடனே ஒரு போட்டோவை வெளியிடுவார். அஜித் தொடர்பான புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டால் விஜய் தொடர்பான புகைப்படம் அல்லது அப்டேட் இணையைத்தில் வெளியாகும்.

இதையும் படிங்க: லைகாவை அலற விட்ட அஜித் குமார்!.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை!.. பம்மிய தயாரிப்பு நிறுவனம்?..

ஆனால், எங்கு பேசினாலும் ‘நண்பர் அஜித்’ என்றே பேசுவார் விஜய். இந்நிலையில்தான் அஜித்தின் ஒரு ஹிட் படத்தை விஜய் விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா.

vijay ajith

இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனது. உடனே அப்பட இயக்குனர் வெங்கட்பிரபுவை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தாராம் விஜய். மேலும், அர்ஜூன் சார் ரோலுக்கு என்னை கேட்டிருந்தால் கூட நான் நடித்திருப்பேன். ஏன் என்னை கேட்கவில்லை? என சொல்லமாக கோபித்தும் கொண்டாராம். தற்போது அதே வெங்கட்பிரபுவுடன் இயக்கத்தில்தான் விஜய் கோட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top