Categories: Cinema News latest news

தளபதி விஜயின் திருமண சர்ச்சை.! கோபப்பட்டு SAC போட்டுடைத்த உண்மை.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தற்போது வளர்ந்து நிற்கிறார் என்றால் அது தற்போது விஜய் தான். இவரது திரைப்படங்கள் அடுத்தடுத்து வசூல் சாதனைகளை செய்து அதனை நிரூபித்து வருகிறது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கு அறிவிப்பு வெளியான உடனே வியாபாரம் ஆகும் அளவிற்கு வளர்ந்து விட்டார் விஜய் .

இவர் தனது வெளிநாட்டு லண்டன் ரசிகையான சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றே பெரும்பாலான ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர்.

ஆனால்,இத்திருமணம் உண்மையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஓர் அரேஞ் திருமணமாம். இதனை SAC அப்போதே தெரிவித்துவிட்டார்.

 

இதையும் படியுங்களேன் – பொள்ளாச்சி விவகாரத்தை தூசி தட்டிய உதயநிதி.! வெளியான பயங்கர வீடியோ.!

விஜய் வளர்ந்து வந்த நேரமது, அப்போது, விஜய் திருமண செய்தியை அறிவிக்க பத்திரிக்கையாளர்களை கூட்டி, விஜயின் திருமணம் காதல் திருமணம் அல்ல. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என அப்போதே கூறியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் கூட விஜய் காதல் திருமணம் செய்ய உள்ளார். என்று திருமணத்திற்கு முன்பே பத்திரிக்கைகளில் எழுதினர்.

ஆனால், அதனை விஜயின் தந்தை திட்டவட்டமாக மறுத்து இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என அடித்து கூறியுள்ளார். விஜய் கூட அந்த சந்திப்புக்கு தாமதமாக தான் வந்தார். ஆனால், விஜயும் இதையே தான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan