பொள்ளாச்சி விவகாரத்தை தூசி தட்டிய உதயநிதி.! வெளியான பயங்கர வீடியோ.!
கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், வேறு ஹீரோ படங்களை தயாரிப்பதை தவிர்த்து, தான் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
தற்போது மீண்டும் திமுக ஆட்சி, மீண்டும் தயாரிப்பாளர் - நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தீயாய் இயங்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். கனா பட இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்களேன் - உதயநிதி வீட்டு வாசலில் காத்துக்கிடக்கும் வடிவேலு.! காரணம் இதுதானா.?!
இந்த படம் ஹிந்தியில் சாதி கொடுமைகள் பற்றி எடுக்கப்பட்டு வெற்றியடைந்த ஆர்டிகிள் 15 படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீஸ் ஆகியள்ளது.
இந்த டீசரில் பொள்ளாச்சில் இரண்டு ஆதிதிராவிடர் இளம் பெண்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர்.அதனை விசாரிக்கும் அதிகாரியாக உதயநிதி நடித்துள்ளார். இந்த படத்தின் மேக்கிங் பயங்கரமாக ராவாக அமைத்துள்ளது படத்தின் டீசரில் அப்பட்டமாக தெரிகிறது. வலிமை ரிலீஸ்க்கு பிறகு நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் இருக்கும் என கூறப்படுகிறது.