
Cinema News
சூர்யாவுக்கு வாழ்க்கையை கொடுத்த அந்த படம் விஜய் நடிக்க வேண்டியதாம்!. எப்படி மிஸ் ஆச்சி தெரியுமா?…
Published on
By
Vijay: நடிகர் விஜய் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் அவர் நிறைய நல்ல படங்களை மிஸ் செய்து இருக்கிறார். அப்படி அவர் கேரியரில் பெரிய இழப்பாக பார்க்கப்படும் ஒரு படம் தான் காக்க காக்க. இப்படத்தினை எப்படி விஜய் மிஸ் செய்தார். என்ன ஆனது என்ற சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காக்க காக்க. அப்படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட சூர்யாவின் மாஸ் இமேஜை அதிகரித்த செய்ததில் இந்த படத்திற்கு தான் முக்கிய பங்கு உண்டு. ஆனால் இந்த படம் சூர்யாவிற்கு தயாரானது இல்லையாம்.
இதையும் படிங்க: இதனால்தான் உங்கள் படத்தில் வேலை செய்யவில்லை!.. பி.சி.ஸ்ரீராம் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன ஷங்கர்..
மின்னலே படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் காக்க காக்க படத்தின் கதையை உருவாக்கி இருந்தார். ஆனால் அப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பின்குறிப்பு. இந்த கதையை முழுக்க முழுக்க விஜயிற்காக தயார் செய்து வைத்தாராம். அப்படத்தினை இயக்க இருந்தது. வி.எச்.சுந்தர் அந்த படத்தினை தயாரிக்க இருந்தார்.
படத்தின் கதையை சொல்ல தன்னுடைய சகாக்களும் கௌதம் மேனன் சென்றாராம். அப்போதெல்லாம் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் கதை கேட்டு ஓகே செய்வார். கதையை கேட்க தொடங்கியவருக்கு அதில் பிடித்தம் இல்லாமல் போனதாம். ஹீரோ தோக்குற மாதிரி கதை இருக்கு என நோ சொல்லிவிட்டாராம்.
இதனால் கௌதம் மேனனும் அப்செட்டாகி கிளம்பி விடுகின்றார். தயாரிப்பாளரும் அவர்களை ஆபிசில் இருந்து போக சொல்லிவிடுகிறார். நிறைய பேருக்கு கதை சொல்லியும் யாரும் ஓகே சொல்லாமல் போகும் நிலையில் தான் தாணு அந்த படத்தினை தயாரிக்க ஒப்புக்கொள்கிறார். பின்னர் சூர்யாவிடம் கதை சொல்ல அவருக்கு அந்த கதை ரொம்பவே பிடித்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீ ஏற்கனவே செஞ்சது போதும்பா சாமி! இத்தனை வருஷத்துல இத பண்ணியா? வைரலாகும் விஷால் தந்தையின் பேட்டி
KPY Bala: சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் கே பி ஒய் பாலா....
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...