Categories: Cinema News latest news throwback stories

விஜய் படத்தை தட்டி பறித்த அஜித்குமார்… ஓபனாக போட்டு உடைத்த இயக்குனர்…

Vijay vs Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே எப்போதும் போட்டா போட்டி இருக்கும். ஒருவர் நடிக்க இருந்த கதையில் இன்னொருவர் நடித்த திரைப்படம் எல்லாம் இருக்கிறது. அப்படி விஜயிற்காக தயாரான கதையை தானே சென்று அஜித் வாங்கி கொண்டாராம்.

தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனான விஜய் இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் மட்டும் இதுவரை நடித்ததில்லை. சுந்தர் சி ஒரு முறை விஜய் இருக்க கதை சொல்ல சென்றிருக்கிறார். ஆனால் நடிகர் விஜயகாந்த் போல விஜய் இருக்கும் முழு படத்தின் கதையையும் கூற வேண்டும். ஒவ்வொரு சீனையும் தெளிவாக சொல்லி முடித்தால் மட்டுமே அவர் அந்த படத்தில் நடிக்கலாமா வேணாமா என்பதை கூறுவாராம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் படம் மிஸ்ஸாச்சு… தளபதி படத்தில் துண்டு போட்ட பிரபல ஹீரோ… நீங்க வெவரம் தான் சாமி…

ஆனால் சுந்தர் சிக்கு அப்படி முழுதாக கதை சொல்லும் எண்ணம் இல்லாமல் ஒரு சின்ன ஐடியாவை மட்டும் அவரிடம் கூறிவிட்டு வந்திருக்கிறார். இதை தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், விஜய்க்கு முழு படத்தின் கதையையும் கேட்கும் படி தான் பழக்கியிருக்கிறேன்.

அதனால் நீங்கள் சொன்ன ஒன்லைன் அவருக்கு புரியவில்லை. இருந்தும் உங்கள் படத்தில் நடிக்க விஜய் விருப்பத்துடன் இருப்பதாக கூறுகிறார். ஆனால் அடுத்த பத்து நாட்களில் அஜித் சுந்தர் சியை வந்து நேரில் சந்திக்கிறாராம். உங்களுடன் ஒரு படத்தில் பணி புரிய வேண்டும் என விரும்புகிறேன். நாம் இருவரும் இணைந்து ஒரு செய்யலாமா என கேட்கிறார். இதை கேட்ட எஸ்சிக்கு ரொம்பவே சந்தோஷமாகி விடுகிறதாம்.

இதையும் படிங்க: ஒரே வருடத்தில் மூணா? வேற லெவல் ஆட்டமால இருக்கு.. உலகநாயகன் ஜெட் ஸ்பீடில் இருக்காருப்பா…

ஒரு ஹீரோவை தன்னை தேடி வந்து ஒரு படம் பண்ணலாமா என கேட்கும் போது எப்படி கைவிட மனம் வரும். உடனே விஜயிக்காக எழுதி வைத்திருந்த உன்னைத் தேடி படத்தை அஜித்தை வைத்து முடித்துவிடுகிறார். படமும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்க்கு இன்னொரு கதையை தயார் செய்து கொள்ளலாம் என சுந்தர் சி நினைத்திருந்தாராம்.

ஆனால் அதன்பின் அதற்கான வாய்ப்பே அவருக்கு அமையாமல் போனது.து இதுவரை சுந்தர்சியின் இயக்கத்தில் விஜயால் ஒரு படம் கூட நடிக்க முடியாமல் இருக்கிறது. விரைவில் தன்னுடைய 69 ஆவது படத்தை முடிக்கும் விஜய் சினிமாவிலிருந்து விடை பெறவும் இருக்கிறார் என்பதால் இந்த கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.

Published by
Shamily