ரஜினி படம் மிஸ் ஆச்சி … தளபதி படத்தில் துண்டு போட்ட பிரபல ஹீரோ… நீங்க வெவரம்தான் சாமி…
May 8, 2024, 17:40 IST
Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்க இருந்ததாக தகவல் பரவிய நிலையில் அந்தப் படத்தில் நடிகருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக தற்போது தளபதி நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் ஒரிஜினல் பாய்ஸும் இருக்காங்களா… அந்த சீனை சரியா பார்த்தீங்களா? சமீபத்தில் நடிகர் யுகேந்திரன் தான் வில்லன் ரோலில் நடிப்பதாக தன்னுடைய வீடியோவுடன் குறிப்பிட்டிருந்தார். பிரபல நடிகர் மைக் மோகனை இப்படத்தில் வில்லனாக களம் இறக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதை அடுத்து இப்படத்தில் விஜயும் ஒரு வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் மறைந்த முன்னாள் நடிகர் கேப்டன் விஜயகாந்த் சில காட்சிகள் தோன்ற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனி உள்ளிட்ட சில வீரர்களும் படத்தில் இடம்பெறுவதாக கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தது. இதையும் படிங்க: பி.வாசுவுக்காக முதன் முதலில் அந்த காரியத்தை செய்த ஜெயலலிதா! இப்படிலாம் நடந்திருக்கா?
அவரும், என்னை தலைவர் கூப்பிட்டால் யோசிக்காமல் சென்று விடுவேன் என சிவகார்த்திகேயனும் மேடையிலே குறிப்பிட்டிருப்பார். ஆனால் அது நடக்காமல் போக தளபதி படத்தில் இணைந்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர். விஜய் சினிமாவில் இருந்து வெளியாகும் இந்த நேரத்தில் அவரின் கடைசி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது அவர் கேரியருக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும் எனவும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஏகப்பட்ட சர்ப்ரைஸ் நிகழ்வுகளுடன் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் தற்போது இன்னொரு பெரிய சர்ப்ரைஸை வெங்கட் பிரபு வைத்திருக்கிறாராம். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே தலைவர் 171 திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்தது.
