Connect with us
vaasu

Cinema News

ரஜினியின் மேடைப்பேச்சு இந்தளவுக்கு பாதிச்சிருச்சா? வாசுவிடம் மனம் திறந்த விஜய்

சரத்குமார் பற்ற வைத்த தீ. இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது. அதை அணைப்பவர்களே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் – அஜித் என்ற போட்டி இருந்த நிலையில் ஒரே நாளில் அதை தலைகீழாக மாற்றினார் சரத்குமார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று சொன்ன நிலையில் பொங்கி எழுந்தார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

அதற்கு அன்றே விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் பண்ணாமல் போனதுதான் விஜய் செய்த மிகப்பெரிய தவறு. அதுவும் ரசிகர்களுக்கு ஒரு வித அதிர்ப்தியை தந்தது. இப்படியே இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க ஜெய்லர் பட ஆடியோ விழாவில் மறைமுகமாக தாக்குவது போல் விஜயை பற்றி பேசியிருந்தார் ரஜினி.

இதையும் படிங்க : 600 கோடி வசூலையே நெருங்க திணறும் ரஜினி படம்!.. அசால்ட்டா அத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கும் கமல்?..

லியோ பட ஆடியோ விழாவிலாவது விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பினர் வேண்டுகோள் வைக்கின்றனர். இந்த நிலையில் பி. வாசு சந்திரமுகியில் ரஜினி வந்ததை பற்றியும் சந்திரமுகி 2 படத்தை பற்றியும் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அப்போது சந்திரமுகி பட ஆடியோ விழாவில் ரஜினி ‘ நான் ஒன்னும் யானை இல்லை. விழுந்த உடனே எந்திருக்கும் குதிரை . எத்தனை முறை விழுகிறேனோ அத்தனை முறையும் வேகமாக எழுந்து கொண்டே இருப்பேன்’ என்ற வசனத்தை கூறி அனைரையும் நடுங்க வைத்திருப்பார்.

இதையும் படிங்க : கால் சென்டர்ல கமல்ஹாசன்!.. அமெரிக்காவுல என்னை வேலை பண்ணிட்டு இருக்காரு பாருங்க ஆண்டவர்!..

இந்த விழாவிற்கு விஜயும் வந்திருந்தாராம். அப்போது விழா முடிந்து  வெளியே வந்த விஜய் வாசுவிடம் ‘இதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். இல்ல சார். இன்னும் படமே ரிலீஸ் ஆகல. அதுக்குள்ள எவ்ளோ நம்பிக்கையில் பேசுறார் பாருங்க’ என்று சொன்னாராம்.

இதை குறிப்பிட்டு பேசிய வாசு இந்த ரஜினியின் மேடைப்பேச்சை அப்பவே விஜய் தனக்கு ஒரு பாடமாகவே எடுத்துக் கொண்டார் என்றும் வாசு கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top