மற்ற மொழிப் படங்களை பார்த்து அதை அப்படியே காப்பியடிப்பது நடிகர் விஜய்க்கு எப்பவுமே பிடிக்கும். மலையாளத்தில் வெளியான படங்களை முதலில் தமிழில் ரீமேக் செய்து வந்தார். பிரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்கள் மலையாளப் படங்கள் தான்.
அதன் பின்னர் கமர்ஷியல் பக்கம் திரும்பிய விஜய் தெலுங்கு சினிமாவை ஃபாலோ செய்ய ஆரம்பித்தார். ஒக்கடு படத்தை பார்த்த விஜய் இந்த படத்தில் நாம் நடித்தால் மகேஷ் பாபுவையே தூக்கி சாப்பிடலாம் என நினைத்து கில்லி என அந்த படத்தை ரீமேக் செய்து மிகப்பெரிய ஸ்டாராக தமிழ் சினிமாவில் மாறினார்.
இதையும் படிங்க: துப்பாக்கி கதை விஜய்க்கு பண்ணது இல்ல!.. அந்த ஹீரோ நடிக்கல!.. பகீர் கிளப்பும் முருகதாஸ்…
அதன் பின்னர் போக்கிரி உள்ளிட்ட படங்களும் மகேஷ் பாபு படங்கள் தான். மகரிஷி படத்தை இயக்கியவரை வைத்து வாரிசு படத்தில் நடித்த விஜய் கோட் படத்தில் குண்டூர் காரம் படத்தில் ஒன்றுக்கும் உதவாத ரோலில் நடித்த மீனாட்சி சவுத்ரியை தனது படத்தின் ஹீரோயினாக மாற்றியுள்ளார்.
தெலுங்கில் சக்கைப் போடு போட்ட ஜானி மாஸ்டரை தனது அரபிக் குத்து, ரஞ்சிதமே பாடல்களுக்கு புக் செய்த விஜய் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற “மடக்கி தட்டு” பாடலுக்கு கொரியோகிராஃபி செய்த சேகர் மாஸ்டரை தற்போது புக் செய்திருக்கிறாராம்.
இதையும் படிங்க: கோட் பட இசையமைப்பாளருக்கு கொக்கிப் போட்ட காடுவெட்டி ஹீரோ!.. இதுல யாரு சொல்றதுப்பா நிஜம்?..
மகேஷ் பாபுவையே அந்த ஆட்டம் போட வைத்த சேகர் மாஸ்டர் பாட்டுக்கு விஜய் நடனமாடுகிறார் என்றால் பாடல் வேறலெவலில் தான் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கோட் படம் ஹாலிவுட் ரேஞ்ச் படமாக வரும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு 4 பாட்டு, 5 ஃபைட் என வழக்கமான மாஸ் மசாலா படம் போல வெங்கட் பிரபு கிண்டுகிறாரா? என்றும் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…