×

ஏலே கோவிட் டைமில் ஷூட்டிங் கேட்குதா... மக்கள் செல்வனுக்கு அபராதம் போட்ட போலீஸார்..
 

கோவிட் விதிமுறையை பின்பற்றாத விஜய் சேதுபதி மீது திண்டுக்கல் காவல்துறை அபராதம் விதித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
 
ஏலே கோவிட் டைமில் ஷூட்டிங் கேட்குதா... மக்கள் செல்வனுக்கு அபராதம் போட்ட போலீஸார்..

ஹீரோ, குணச்சித்திர நடிகர் என வெரைட்டி காட்டி வந்த விஜய் சேதுபதி, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். பவானி கேரக்டரில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதி கதாபாத்திரம் அப்ளாஸ் அள்ளியது. அந்த கேரக்டர் விஜய் சேதுபதி பல்வேறு புதிய வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. தொடர்ந்து, பாலிவுட் துவங்கி எல்லா மொழிகளிலும் ரவுண்ட் கட்டி வருகிறார் மக்கள் செல்வன். ஒரு நாளைக்கு சம்பளமாக ஒரு கோடி வரை வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

தொடர்ந்து, படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதியின் #VJS46 படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நடைபெற்று இருக்கிறது. நம்ம மக்களுக்கு தான் ஷூட்டிங்னு சொன்னாவே கூட்டம் கூடிடுவாங்களே. அப்படி விஜய் சேதுபதியை பார்க்க மக்கள் கூட்டம் படப்பிடிப்பு தளத்தில் அதிகமாக இருக்கிறது. தற்போதைய சூழலில் கொரோனா பரவி வருவதை மறந்த மக்கள், மாஸ்க் அணியாமல் சமூக இடைவேளையை பின்பற்றாமல் இருந்து உள்ளனர். 

இதை கண்ட காவல்துறை படக்குழுவை அழைத்து டோஸ் விட்டு இருக்கிறார்கள். பிஸியான நேரத்தில் படப்பிடிப்பை வைத்ததால் தான் இவ்வளவு கூட்டம். அபராதம் கட்டுங்க என எகிறி இருக்கிறார்கள். கடைசியில் 5000 ரூபாய் கட்டப்பட்டு படப்பிடிப்பும் அந்த இடத்தில் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News