ஒருவழியா இந்தியன் 2-வுக்கு தேதி குறிச்ச லைக்கா!. 5 நாள் வசூலை அள்ள போறாங்க!..

ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி என பலரும் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். லஞ்சம் மற்றும் ஊழல்களை எதிர்த்து சுதந்திர போராட்ட தியாகி களம் இறங்கும் கதை. அதில், வயதான இந்தியன் தாத்தாவாக கமல் அசத்தி இருந்தார்.

இப்போது 28 வருடங்களுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பகுதி உருவாகி இருக்கிறது. 4 வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு இருவர் மரணம் அடைந்தது, கொரோனா ஊரடங்கு, கமலுக்கும் லைக்காவும் பஞ்சாயத்து, ஷங்கருக்கும் லைக்காவும் இடையே பஞ்சாயத்து என பல காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஒரே வருடத்தில் மூணா? வேற லெவல் ஆட்டமால இருக்கு.. உலகநாயகன் ஜெட் ஸ்பீடில் இருக்காருப்பா…

அதன்பின் கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பு நடந்தது. அதில், இப்படத்தின் மூன்றாம் பகுதியும் உருவாகிவிட்டதாக சொல்லப்பட்டது. மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தியன் 2 உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கமல் மட்டுமில்லாமல் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

indian

மேலும், நெடுமுடி வேணு போன்ற சிலரை ஏ.ஐ மூலம் இப்படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் என சொல்லப்பட்டது. வழக்கமாக ஷங்கரின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார். ஆனால், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் உருவான போது கமல் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் படம் மிஸ்ஸாச்சு… தளபதி படத்தில் துண்டு போட்ட பிரபல ஹீரோ… நீங்க வெவரம் தான் சாமி…

இந்த படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் ‘தக் லைப்’ படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் இந்தியன் 2 படத்தின் வேலைகளும் நடந்து வந்தது. கடைசியாக ஜுன் மாதம் இப்படம் வெளியாகும் என லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், இப்படத்தை ஜூலை மாதம் 17ம் தேதி வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூலை 17ம் தேதி புதன் கிழமை மொஹரம் பண்டிகை வருகிறது. அன்று வெளியிட்டால் ஞாயிறு வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் வசூலை அள்ளிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறார்களாம்.

 

Related Articles

Next Story