Categories: Cinema News latest news

என் மச்சான் செமயா நடிச்சிருக்கான்.! விஜய் சேதுபதியை மிரள வைத்த அந்த நடிகர்.! இது செம டிவிஸ்டு.!

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் முயற்சி செய்து தற்போது நல்ல நிலைமையில்,  தங்களது நடிப்பு திறமையின் மூலம் இருக்கின்றனர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி. இவர்கள் இருவருமே நீண்ட வருடங்களாக சினிமாவில் சாதிக்க போராடி வந்தனர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள்.

அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள் மாமா மச்சான் என கூப்பிட்டு  கொள்ளுமளவிற்கு  இவர்கள் இருவரும் நண்பர்கள் .அண்மையில், இருவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் ” விடுதலை”  எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் முடிந்து விட்டன தற்போது, விஜய்சேதுபதிக்கான இறுதிக்கட்ட காட்சிகள் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த இடைவெளியில் ஏற்கனவே சூரி நடித்த காட்சிகளை விஜய் சேதுபதி பார்த்துள்ளார் ஆம்

இதனைப் பார்த்து வியந்து அண்மையில் ஒரு வீடியோவில் விஜய் சேதுபதி தனது நண்பன் சூரியின் நடிப்பை வியந்து  பாராட்டிப் பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- நான் அந்த வயசுலயே எல்லாம் பாத்துட்டேன்.! ராஷி கண்ணாவின் மனதை உலுக்கிய கசப்பான சம்பவம்.!

என் மச்சான் பிரமாதமாக நடித்திருக்கான். அவனிடம் நான் அடிக்கடி சொல்லுவேன் சில மக்கு இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர் அவர்களிடம் சிக்கி ஹீரோவாகிறார் என்று உனது வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சென்று உனது நடிப்பு திறனை மேலும் வெளிக்கொண்டு வா  என்று நான் அறிவுரை கூறி உள்ளேன் என்று தனது மச்சான் சூரி பற்றி மனதார பாராட்டினார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் தனது சக நடிகன் எப்படி இருந்தால் என்ன என்று இருக்கும் இந்த சினிமா உலகில் தனது நண்பன் சூரி தனது அவரது நடிப்பு திறனை மென்மேலும் வெளிக்கொணர வேண்டும் என்று அக்கறையோடு அறிவுரை கூறும் விஜய் சேதுபதியின் செயல் திரையுலகில் மட்டுமன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Manikandan
Published by
Manikandan