×

ஒரு குட்டிக்கதை பாடலை பாடியது விஜய்...  இதோ! அனிருத்தே சொல்லிட்டாரு... 

மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குட்டிக்கதை பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. 
 

மாஸ்டர் படத்தில் ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் பற்றி அப்டேட் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதோடு, நடிகர் விஜய் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் போஸ்டரும் வெளியானது.

இதைத் தொடந்து இப்பாடலை யார் பாடியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. அனிருத்தான் பாடியிருப்பார் என காலை முதல் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்பாடலை விஜயே பாடியிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ள அனிருத் ‘ ஒரு குட்டிக்கதையை தளபதி விஜயே அவரின் குரலில் உங்களிடம் சொல்லுவார்’ என டிவிட் செய்துள்ளார். இப்பாடல் பிப். 14ம் தேதி மாலை5 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News