Categories: Cinema News latest news

இதை விட உயரத்துக்கு நான் போனாலும்!.. கேரள ரசிகர்களுடன் செல்ஃபியுடன் அந்த விஷயத்தையும் பேசிய விஜய்!..

நடிகர் விஜய் கேரளாவில் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். தினம்தோறும் வித வித விக்குகளை வைத்து விஜய் நடித்து வருகிறார் என்றும் அவரது தலையில் முடியில்லை என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நடிகர் விஜய்யின் புதிய ஹேர் ஸ்டைலை பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜுவுடன் எல்லாம் ஒப்பிட்டு மீம் போட தொடங்கி விட்டனர். இந்நிலையில், இன்று கொஞ்சம் படையப்பா ரஜினி போல டீசன்ட்டா உள்ளே டீசர்ட், வெளியே சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு நல்ல லுக்குடன் ரசிகர்களை சந்திக்க கேரவன் மீது விஜய் ஏறினார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கே நடித்து காட்டிய இயக்குனர்!.. கண்ணாடி முன்பு இரவு முழுவதும் பயிற்சி எடுத்த நடிகர் திலகம்!

மேலும், மைக்கை பிடித்துக் கொண்டு பேசிய நடிகர் விஜய் தொடர்ந்து கேரள ரசிகர்கள் தன் மீது அன்பு செலுத்தி வருவதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை என்றும் தமிழாடும் கேரளாவும் என்னுடைய இரண்டு கண்கள் மாதிரி என பாசத்தை பொழிந்தார்.

மேலும், இப்ப இருக்குற உயரமே எனக்கு சந்தோஷத்தை தருகிறது. நான் இன்னும் கொஞ்சம் உயரம் போனாலும், உங்களுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வேண்டும் என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..

கேரள ரசிகர்கள் சுற்றியிருக்க நடிகர் விஜய் கேரவன் மீது ஏறி நின்று எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், தினமும் விஜய்யை காண பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி வருகின்றனர்.

 

Saranya M
Published by
Saranya M