Categories: Cinema News latest news throwback stories

விஜயகாந்துக்கு பதிலா வேறு நடிகரை வச்சி எடுத்த டைரக்டர்!. கேப்டன் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?..

Vijayakanth: தமிழ் சினிமா பிரபலத்தை யாருமே தப்பாக சொல்லாமல் அவர் பெருமையை மட்டுமே சொல்கிறார் என்றால் அது இப்போதைய சூழலில் விஜயகாந்த் மட்டும் தான். அவர் அத்தனை செய்து இருக்கிறார். அப்படி இயக்குனர் ஒருவர் தனக்கும் விஜயகாந்துக்குமான உறவு குறித்து பேசி இருக்கிறார்.

இயக்குனர் ராம நாராயணன் இயக்கத்தில் உருவாகி வந்தது தான் கரிமேடு கருவாயன் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த், நம்பியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஒரு தியேட்டரில் படம் ஷூட் செய்ய வேண்டும். அப்போது விஜயகாந்த் மீது இருந்த ஆசையால் கூட்டம் கூடிவிட்டது.

இதையும் படிங்க: அடுத்த வருஷம் ராகவா லாரன்ஸுக்கு செம ட்ரீட் தான் போலயே.. எல்லாமே மாஸ் டைரக்டர்கள்..!

இதில் படப்பிடிப்பை நடத்தவே முடியாது. ஆனால் தயாரிப்பாளர் சங்கிலி முருகனோ படத்தினை எடுக்க கூற ராமநாராயணன் முடியாது என்றாராம். ஒரு கட்டத்தில் எனக்கு வேறு படம் இருக்கு. இந்த படத்தினை இயக்குனர் கோலப்பனை வைத்து முடிக்க சொல்லி அவர் கிளம்பிவிட்டார்.

அப்போது அருணாச்சல ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடத்தப்பட இருந்தது. ஒரு காட்சியில் விஜயகாந்த் வெயில் நேரத்தில் எண்ட்ரி எடுக்கும் ஒரு காட்சி வேண்டும். ஆனால் விஜயகாந்த் வரவில்லை. கொஞ்சமும் யோசிக்காத கோலப்பன் டூப்பை போட்டு அந்த காட்சியை முடித்துவிட்டார். 

இதையும் படிங்க: எம்எஸ்வி-யே திருப்பி அனுப்பிய பாட்டை சூப்பர் ஹிட் ஆக்கிய இசைப்புயல் – வைரமுத்து பகிர்ந்த சீக்ரெட்

மேலும், தமிழ் சினிமாவில் அப்போதைய காலத்தில் பஞ்ச பாண்டவர்களாக விஜயகாந்த், வாகை சந்திரசேகர், தியாகு, ராதா ரவி ஆகியோர் இருந்தனர். அதில் தர்மர் என்றால் விஜயகாந்த் தான். எங்குமே தன்னை நடிகராக அவர் சீன் போட்டதே இல்லை. தெருவில் வேஷ்டியை கட்டிக்கொண்டு இறங்கி நின்ற சம்பவமும் நடந்ததாக தெரிவித்து இருக்கிறார்.

Published by
Shamily