Categories: Cinema News latest news

மக்கள் துடிக்கிறாங்க!… பிரேமலதா குடும்பம் பார்க்காம விட்டுச்சா? விஜயகாந்த் குடும்பம் உடைத்த உண்மை!

Vijayakanth: விஜயகாந்த் இறந்ததில் இருந்து அவர் குறித்து பல திடுக்கிடும் உண்மைகளும் அவர் குறித்து சிலர் சொல்லும் ஆச்சரிய தகவலும் இணையத்தில் றெக்கை கட்டி சுற்றி வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் தம்பியும், அவர் மனைவியும் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அவர்கள் பேட்டியில் இருந்து, விஜயகாந்த் இங்கு தான் வளர ஆரம்பித்தார். என் நாத்தனார் 20 நாளில் இருக்கும் போது தான் அவர் அம்மா இறந்தார். அதை தொடர்ந்து என்னுடைய மாமியாரை அவர் அப்பா இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார். மொத்தம் 11 பேர் ஒன்றாகவே இருந்தனர்.

இதையும் படிங்க: பிரேமலதாதான் பொண்ணு!. ஜோசியத்தை வச்சி கேப்டனை நம்ப வச்ச குடும்பத்தினர்…

என் மூத்த நாத்தனார் பார்த்து கட்டிவைத்த பெண் தான் பிரேமலதா. அக்கா எங்களிடம் அன்பாக இருப்பார். இங்கு வரும் போது வீட்டுக்கு வருவது அவர் பழக்கம். கட்சி தொடங்கிய பின்னரே இந்த பக்கம் வரமுடியாமல் போனது. சென்னை போனால் எங்களை அப்படி வைத்து பார்த்து கொள்வார். அருகில் இருப்போரிடம் எல்லாம் என் தம்பி, பிள்ளைகள் என மனமார அறிமுகப்படுத்தி சந்தோஷப்படுவார்.

அவரின் எல்லா தங்கைகளுக்குமே திருமணம் செய்துவிட்டு தான் அவர் கல்யாணம் செஞ்சிக்க ஓகே சொன்னார். நல்லா இருந்தப்ப மீடியா அவரை கஷ்டப்படுத்தியது. செத்து போன பிறகு தூக்கி வச்சி பேசுறாங்க. அவரை உயிரோட பொதைத்ததே இந்த மீடியாக்கள் தான். அவர் நல்லா இருந்த போதே இறந்துவிட்டார் என்று போட்டுக்கிட்டே இருந்தாங்க. அது எங்களுக்கு எவ்வளோ வலியை கொடுக்கும்.

இதையும் படிங்க: ஏங்க வெங்கட் பிரபுக்கு இந்த பழக்கமே இல்ல!… அப்புறம் எப்படி? கோட்டும் காப்பி தான்!

சாவு நாளில் கூட நாங்களும் அங்கு தான் இருந்தோம். அத்தனை மீடியாக்கள் இருந்தார்கள். கடைசி காரியம் கூட எங்களால் பண்ண முடியவில்லை. பிரபா தான் நகருங்க என அவர்களை வழிவிட சொல்லி எல்லாத்தையும் செய்து முடித்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

Published by
Shamily