
Cinema News
படப்பிடிப்புக்கு எதிர்ப்பு!.. வேட்டிய மடிச்சிகட்டி 50 பேரை அடித்த விஜயகாந்த்!.. நிஜத்திலும் அவர் ஹீரோதான்!..
Published on
By
பொதுவாக சினிமா ஹீரோக்கள் கேமரா முன்பு மட்டுமே ஹீரோயிசம் செய்வார்கள். சண்டை காட்சி நடிகர்களை பறக்கவிடுவார்கள். ஹீரோ ஒருவர் 50 ரவுடிகளை பொளந்து கட்டுவார். ஆனால், இது எல்லாம் பொய்தான். ஆனால், விஜயகாந்த் நிஜத்திலும் ஹீரோதான். நிஜ வாழ்வில் அவர் எப்படியோ அப்படித்தான் சினிமாவிலும் நடிப்பார். அல்லது சினிமாவில் எப்படி நடிக்கிறாரோ அப்படித்தான் நிஜவாழ்விலும் இருப்பார்.
நிஜத்திலும் மிகவும் தைரியமான மனிதவர் அவர். எங்கேயும், எப்போதும், யாருக்காகவும் பயப்படமாட்டார். தவறென்றால் முதல் ஆளாக தட்டிக்கேட்பார். ஒருவருக்கு பிரச்சனை எனில் உடனே தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். அவர் படப்பிடிப்பில் இருந்தால் நடிகைகள் பயப்படவே தேவையில்லை. சில்மிஷ மனநிலையில் வரும் ரசிகர்களை ஓடவிடுவார். படப்பிடிப்பில் ஒரு பிரச்சனையில் நமக்கென்ன என இருக்காமல் உடனே அதில் தலையிட்டு தீர்வு காண்பார்.
இதையும் படிங்க: நான் கேட்டது அதுதான்!. ஆனா விஜயகாந்த் கொடுத்தது மறக்கவே முடியாது!. உருகும் பொன்னம்பலம்…
படப்பிடிப்பு நடக்கும்போது யாரேனும் இடையூறு செய்தால் உடனே வேட்டியை மடித்துகொண்டு இறங்கி துவம்சம் செய்வார். விஜயகாந்த் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் தமிழ் செல்வன்.
கர்நாடகா மாநிலத்தின் மைசூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தமிழ் செல்வன் என்கிற தலைப்பில் இங்கே படம் எடுக்கக்கூடாது என சொல்லி வாட்டாள் நாகராஜ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது விஜயகாந்த் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த் வேட்டியை மடித்துக்கொண்டு அங்கிருந்த ஒரு இரும்பு ராடை கையில் எடுத்துக்கொண்டு அவர்களை அடித்து விரட்டியுள்ளார். விஜயகாந்தின் ஆவேசத்தை பார்த்து அங்கு வந்த 50க்கும் மேற்பட்டோர் வந்த வண்டியை எடுத்துகொண்டு ஓடிவிட்டார்களாம்.
இந்த தகவலை அப்படத்தின் கதாசிரியர் எம்.ரத்தினகுமார் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: நம்பிக்கை துரோகம்!. மனதில் ஏற்பட்ட வேதனை.. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டது இப்படித்தான்!..
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...