Categories: Cinema News latest news

என் ஆயுள் முழுக்க இந்த வரிகள் கேட்டுக் கொண்டே இருக்கும்! கேப்டன் சொன்ன அந்த பாடல்

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற நடிகராக ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அது நம் கேப்டன் விஜயகாந்த். தமிழக மக்களின் மொத்த அன்பையும் பெற்ற விஜயகாந்த் சமீபத்தில்தான் நம்மை விட்டு நீங்கினார். இவரின் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது. எம்ஜிஆருக்கு அடுத்த படியாக விஜயகாந்தைத்தான் அடுத்த எம்ஜிஆராக பார்த்தார்கள்.

ஒருவர் இருக்கும் போது அவரின் புகழ் தெரியாது. இல்லாத போதுதான் அவரின் அருமை தெரியும் என்பார்கள். இது விஜயகாந்தை பொறுத்தவரைக்கும் பொருத்தமாக உள்ளது. கேப்டன் மட்டும் இருந்திருந்தால் அடுத்த முதலமைச்சராகியிருப்பார் என்றெல்லாம் இப்போது பேசி வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் சினேகன் ஒரு விழா மேடையில் விஜயகாந்துடனான அவருடைய நினைவலைகளை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கப்போவது இவர்தானாம்!.. செம காம்போவா இருக்குமே!…

மனோஜ்குமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான படம்தான் ‘ராஜ்ஜியம்’. இந்தப் படத்தில் அமைந்த ஆறு பாடல்களையும் முதலில் சினேகன் எழுதுவதாக இருந்ததாம். மேலும் இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜயகாந்த் அவருடைய கட்சிக் கொடியையும் கலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அதனால் அவருடைய ஓப்பனிங் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக மனோஜ்குமார் வாலியை அணுகியிருக்கிறார். ஏனெனில் எம்ஜிஆருக்காக ஏகப்பட்ட பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். அதனால் அவர் எழூதினால் சிறப்பாக இருக்கும் என மனோஜ்குமார் சினேகனுக்கு தெரியாமலேயே வாலியிடம் எழுத சொல்லியிருக்கிறார். இன்னொரு பக்கம் சினேகனையும் எழுத சொல்லியிருக்கிறார். இது சினேகனுக்கு தெரியாதாம்.

இதையும் படிங்க: அடுத்த பட தயாரிப்பாளரை டிக் அடித்த விஜய்!. அட இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கவே இல்லையே!…

ஆனால் வாலியிடம் அணுகியது விஜயகாந்துக்கு தெரியவர உடனே சினேகனை சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரச் சொல்லி தகவல் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகே விவரம் என்னவென சினேகனுக்கு தெரியவந்திருக்கிறது. ஸ்பாட்டுக்கு வந்ததும் சினேகனிடம் விஜயகாந்த் இந்தப் படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் நீதான் எழுத வேண்டும் என சொல்லி எழுத சொல்லியிருக்கிறார்.

அதன் படி வந்த ஓப்பனிங் சாங்தான் ‘கோட்டை முதல் குமரி வரை கட்டுவோம் ஓர் மாலை..ஏழைகளின் தோழன் என்று போடு அவன் மேலே’ என்ற பாடல். இந்த பாடல் வரிகளை கேட்டதும் விஜயகாந்த் என் ஆயுள் இருக்கிற வரைக்கும் இந்த வரிகள் ஒலித்துக் கொண்டே இருக்கும் என கூறி சினேகனை பாராட்டினாராம்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்திலிருந்து அவரை தூக்க காரணம் ரஜினியா?!.. பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini