Connect with us
vijay

Cinema News

அடுத்த பட தயாரிப்பாளரை டிக் அடித்த விஜய்!. அட இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கவே இல்லையே!…

தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூவரின் படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் எப்போதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். இவர்கள் ஒரு படம் நடித்து முடித்ததும் அடுத்து யாரின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்கள்? தயாரிப்பாளர் யார்?. அந்த படங்களில் நடிக்கப்போகும் மற்ற நடிகர், நடிகைகள் யார்?.. இசையமைப்பாளர் யார்? என எல்லாமே கவனிக்கப்படும்.

சமூகவலைத்தளங்களில் அந்த நடிகர்களின் ரசிகர்கள் இதுபற்றியே அதிகம் விவாதிப்பார்கள். இப்போது விஜயின் அடுத்த படம் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: விஜய்யின் ‘கோட்’ அப்டேட்டுக்கு போட்டியாக சூர்யா வெளியிட்ட கங்குவா மேட்டர்!.. அப்போ கிளாஷ் இருக்கா?..

வருகிற 17ம் தேதி படக்குழு சென்னை திரும்புகிறது. ஏனெனில் 19ம் தேதி விஜய் ஓட்டுபோட வேண்டும். அனேகமாக இதற்கு இந்நேரம் தனி ஸ்கிரிப்ட் ரெடி ஆகியிருக்கும். ஏனெனில், அன்று விஜய் எதில் வந்து ஓட்டு போடுவார்? என்பதே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்புதான். விரைவில் கோட் படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம், விஜய் தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பாளரை தேர்ந்தெடுக்கும் பேச்சுகள் கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர். படத்தை தயாரித்தவர் தனய்யா. இவர்தான் விஜயின் 69வது படத்தை தயாரிக்க போகிறார் என செய்திகள் வெளிவந்தது.

இதையும் படிங்க: அந்த பாட்டுல விஜயை திட்டவில்லை!. அது அந்த ஹீரோவுக்கு போட்டதுதான்!. வெளிவந்த தகவல்…

அதேநேரம், ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்திடப்படவில்லை. ஆனால், படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை வரை தயாரிப்பாளர் யோசிக்க துவங்கி வியாபாரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இது விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் செய்திகள் கசிந்தது. எனவே, சன் பிக்சர்ஸ் பக்கம் விஜய் போவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், லியோ படத்தை தயாரித்த லலித்குமாருக்கே அந்த வாய்ப்பு வழங்கி இருக்கிறாராம் விஜய். அதோடு, லலித்துடன் இணைந்து விஜயின் மேனேஜர் சதீஷும் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அல்லது வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் லலித்குமாரும், சதீஷும் இணைந்து ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இப்படத்தை உருவாக்கி கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top