Categories: Cinema News latest news

எல்லாம் ரெடி!.. ஒருவழியா டேக்ஆப் ஆகும் விடாமுயற்சி!.. ரிலீஸ் தேதியை லாக் செய்த லைக்கா!..

ஒரு படம் முடிந்துவிட்டால் உடனே அடுத்த படத்தை துவங்கும் நடிகர் அஜித் கிடையாது. அவருக்கு எப்போது மூடு வருகிறதோ அப்போதுதான் பட வேலைகளை துவங்குவார். அதுவரைக்கும் அவருக்கு பிடித்தமான பைக் ஓட்டுவது உள்ளிட்ட சில விஷயங்களை செய்ய போய்விடுவார்.

துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்கள் முடிந்துவிட்டது. இதுவரைக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்ளவில்லை. அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜயோ இந்த இடைவெளியில் லியோ படத்தில் முடித்துவிட்டு அடுத்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்தின் வேலையையும் துவங்கிவிட்டார். ஆனால், விடாமுயற்சி திரைப்படம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் பைக் டூர்!.. திரும்பி வர பல மாசம் ஆகுமாம்!… ரசிகர்களை பற்றி கவலைப்படாத அஜித்!…

அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு நாடு நாடாக சென்றது. சரியான கதை உருவாகாமல் இருந்தது, ஐடி ரெய்டு காரணமாக லைக்கா நிறுவனம் கொஞ்சம் முடங்கியது, மேலும், இந்தியன் 2, லால் சலாம், ரஜினியின் அடுத்த படம் என பல படங்களை தயாரிப்பதால் லைக்காவுக்கு ஏற்பட்ட நிதிநெருக்கடி என பல காரணங்களால் விடாமுயற்சி படம் டேக்ஆப் ஆகவில்லை.

இப்போதுதான் எல்லாம் முடிந்து ஒருமுடிவு எட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேல் துபாயில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் அஜித், தனுஷ் படம்! கைவிடப்பட்ட நிலையில் தூசி தட்டி மறுஜென்மம் கொடுத்த நம்ம மில்லர்

எனவே, 3 மாதங்கள் துபாயிலே தங்கியிருந்து அஜித் இப்படத்தில் நடிக்கவுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த வருடம் மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். எனவே, அடுத்த வருடம் கோடைகால விடுமுறையில் ரசிகர்களுக்கு விருந்தாக விடாமுயற்சி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா